ஜனவரி மாத ராசி பலன்கள் – 2020

January month rasi palan

மேஷம்

Mesham Rasi
இந்த மாதத் தொடக்கம் சந்தோஷமாக தொடங்கினாலும், மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கி மாத இறுதியானது மீண்டும் மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த மாதத்திற்கு தேவையான பண வரவு சீராக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். திருமண பேச்சு நடந்து கொண்டிருந்தால் அது நல்ல முடிவை கொடுக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. இந்த மாதம் முழுவதிலும் உங்களது வார்த்தையில் அதிக கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

ரிஷபம்

Rishabam Rasi
இந்த மாதம் உங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே பணவரவு இருக்கும். ஆனால் மாதத் தொடக்கத்தில் உங்களது குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படுவதால் மன நிம்மதி இழக்க நேரிடும். உறவினர்களிடம் பிரச்சனை ஏற்படும் போது வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். ஏழரைச்சனி முடியப்போகும் மாதம் என்பதால் சில இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாத இறுதியில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் உங்களின் நண்பர்களின் மூலம் நல்ல ஆதாயத்தை பெறுவீர்கள்.

- Advertisement -

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்
உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

மிதுனம்

midhunam
இந்த மாதம் அஷ்டம சனி தொடங்கப் போகிறது என்பதால், எந்தவிதமான பயத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். உங்களின் விடா முயற்சியின் மூலம் சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆனால் உங்களை திறமையானவர்களை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். வேலை செய்துகொண்டு இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  துர்க்கை

பரிகாரம்
தினம்தோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையை கொடுத்து வரலாம். துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுவது நன்மை தரும்.

கடகம்

Kadagam Rasi
இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மை தரக்கூடிய மாதமாக அமையப்போகிறது. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுப செலவு ஏற்படும். வேலை செய்வதில் இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் இனி வரும் காலங்களில் நீங்கிவிடும். சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் தொடங்க நல்ல நேரம் வந்துவிட்டது. மாணவர்களாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்ததைவிட படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த மாதம் முன்பகுதியில் எல்லா வகையிலும் நன்மை ஏற்பட்டாலும் கூட, இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் உடன் இருப்பவர்களை முழுமையாக நம்ப வேண்டாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

பரிகாரம்
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வருவது நல்லது. உங்கள் மனதிற்குள் ஸ்ரீராம ஜெயத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள்.

சிம்மம்

simmam
இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய மாதமாக தான் அமையப்போகிறது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் எடுத்து படிக்க வேண்டும். இந்த மாத சனிப்பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு நல்ல அமோகமான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது. திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் கிடைக்கப் போகிறது.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன்

பரிகாரம்
சூரிய பகவான் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும். சிவ வழிபாடும் நன்மை தரும்.

துலாம்

Thulam Rasi
சில சங்கடங்கள் வந்தாலும் பல நன்மைகளை கொடுக்கப்போகும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையப்போகிறது. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுப செலவு ஏற்படும். படிப்பில் கவனம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்துவதைத் தவிர்த்து விட்டு படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் முன்னேற்றம் அடையலாம். திருமணப் பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தைரியமாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன்

பரிகாரம்
உங்களால் முடிந்தால் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று ஒருமுறை தரிசித்து வரலாம். முடியாதவர்கள் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

கன்னி

Kanni Rasi
இதுவரை உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து இருந்த சனி பகவான் இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் நல்ல பலனை கொடுக்கப்போகிறார். எதையும் எதிர் கொள்ளும் மனோ தைரியமும் உங்களுக்கு வந்து விடும். வருமானம் சீராக இருக்கும். சுப விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிக முயற்சி எடுத்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு

பரிகாரம்
தினந்தோறும் உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்

Virichigam Rasi

இந்த மாதம் வரப்போகும் சனிப்பெயர்ச்சியில் இருந்து உங்களுக்கு யோகமான காலம் தான். சனிபகவான் உங்களை விட்டு விலகப் போகிறார். இதுவரை ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். வருமானம் சீராக இருந்தாலும் வீண் விரயச் செலவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தத் தொழிலில் புதியதாக ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு சந்தோஷத்தை அடைவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்
உங்களால் முடிந்தால் பழனி முருகனை ஒருமுறை தரிசித்து வரலாம். இல்லையெனில் உங்கள் வீட்டில் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று தினம்தோறும் வழிபடுவது நன்மை தரும்.

தனுசு

Dhanusu Rasi

கடந்த 5 வருடங்களாக பல கஷ்டங்களை தந்த சனிபகவான் இந்த மாத சனிப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறார். இந்த மாதத்தின் இறுதியில் இருந்து நல்ல நேரம் உங்களுக்கு தொடங்கப் போகிறது. வேலை தேடித் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு  பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சொந்த தொழிலானது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய முதலீடு செய்வதாக இருந்தால் அதிக கடனை வாங்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்
தினம்தோறும் விநாயகரை வணங்குவது நல்ல பலனைக் கொடுக்கும். முடிந்தால் வாரம் ஒருமுறை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

மகரம்

Magaram rasi

இந்த மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சியில் சனிபகவான் உங்கள் ராசியில் அமரப் போகிறார். சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான தீர்வினையும் சனிபகவானை தந்துவிடுவார். பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள உங்களின் தன்னம்பிக்கை உயரும். மாணவர்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது. திருமணப் பேச்சில் சில தடைகள் ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சிலருக்கு வேலையை இழுப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலில் எந்த ஒரு புதிய முயற்சியையும் எடுக்க வேண்டாம். உங்களது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை

பரிகாரம்
செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றுவது நன்மை தரும். உங்களால் முடிந்தால் வயது முதியவர்களுக்கு உதவி செய்யலாம்.

கும்பம்

Kumbam Rasi

உங்களது வருமானத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக செலவுகள் ஏற்பட்டு விடும். உங்கள் வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். பெரிய வேலைகள் கிடைக்கும் என்று நம்பி இருக்கும் வேலையை விட்டுவிட வேண்டாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன்

பரிகாரம்
தினம்தோறும் சிவன் கோவில்களுக்கு சென்று உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள 5 நிமிடம் தியானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

மீனம்

Meenam Rasi
இந்த மாதம் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. உங்களின் பேச்சுத் திறமை அதிகரிக்கும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் சிறு சிறு தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவமானது உங்களுக்கு இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக தான் இது அமையும். திருமணத்தில் இருந்த தடைகளும் நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்

பரிகாரம்
வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும். வயது முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

English Overview:
Here we have January month Rasi palan 2020 in Tamil or January matha Rasi palangal in Tamil. This January month Rasi palangal covers Mesham to Meenam Rasi.