சென்னையில் உள்ளவரின் தீராத நோயை தீர்த்த அகத்திய சித்தர்

agathiyar-1

பொதுவாக நாடி ஜோதிடம் என்பது ஒருவர் கட்டை விரல் ரேகையைக் கொண்டு அதற்கேற்ற பலன்களை சித்தர்கள் எழுதி வைத்துள்ளதை படிப்பதாகும். அப்படியான நாடி ஜோதிடத்தில் “ஜீவ நாடி” என்றொரு பிரிவுண்டு. இந்த நாடி ஏற்கனவே எழுதப்படாமல், தேவையேற்படும் நேரத்தில் இந்த நாடியைப் படிக்கும் அந்த ஜோதிடரின் கண்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய எழுத்துக்கள் தோன்றும் ஓலை சுவடியாகும். அப்படி இந்த ஜீவ நாடி முறையில் ஒரு மனிதரின் நோயை “ஸ்ரீ அகத்திய சித்தர்” தீர்த்து வைத்த நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Agathiyar

ஒரு முறை சென்னையில் வசிக்கும் ஒரு நாடி ஜோதிடரிடம் தனக்கு ஜீவ நாடி படிக்குமாறு வேண்டி ஒரு நபர் வந்தார். வந்த அந்த நபர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, அவர் உடலின் கைகளின் சில விரல்களின் நுனிப்பகுதிகளை அத்தொழுநோய் காரணமாக இழந்துவிட்டதாகவும், தனது இந்த துன்பத்தைப் போக்க “ஸ்ரீ அகத்திய சித்தரை” வேண்டி தனக்காக “ஜீவ நாடி” படிக்குமாறு அந்த ஜோதிடரிடம் வேண்டினார். அதன் படியே அந்த நாடி ஜோதிடரும் அகத்திய சித்தரை வேண்டி அவருக்கு ஜீவ நாடி படிக்கத் தொடங்கினார். அதில் “அந்த ஜாதகர் தன் முற்பிறவியில் செய்த பாவங்களினால் இப்போது இந்நோயினால் அவதிப்படுவதாகவும், இந்நோய் நீங்க அந்த நபர் 48 நாட்களுக்கு “குற்றால” அருவியில் நீராடி அங்கிருக்கும் “குற்றாலநாதர்” ஆலயத்தில் வழிபட்டு வர அவரின் தொழுநோய் நீங்கும்” என ஜீவ நாடியில் அகத்தியர் அருள்வாக்கு கூறினார்.

அகத்தியர் அந்த நபருக்கு அறிவுறுத்தியபடியே அந்த நபரும், குற்றாலம் சென்று 48 நாட்களுக்கு தினமும் அந்த குற்றால அருவியில் நீராடி, அந்த குற்றாலநாதர் கோவிலில் வழிபாடுகள் செய்துவர அவரின் தொழுநோய், அதுவரை அவர் உடலில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நின்று, அந்நோய் அவரிடமிருந்து முற்றிலும் நீங்கியது. இதனால் மிகவும் மகிழ்ந்த அந்த நபர் மீண்டும் அந்த நாடி ஜோதிடரிடம் வந்து இது எவ்வாறு சாத்தியமானது என அகத்திய சித்தரிடம் ஜீவ நாடி மூலம் கேட்டு கூறுமாறு கூறினார்.

Agathiyar

அவரின் வேண்டுகோளுக்கிணங்க அந்த நாடி ஜோதிடர் மீண்டும் அகத்தியரை வேண்டி ஜீவ நாடி படித்த போது, “அந்த நபரை தாம் குற்றால அருவியில் 48 நாட்கள் நீராடக் கூறக் காரணம், அந்த குற்றால அருவி நீர் பொழியும் அந்த மலையுச்சியில் பல அறிய மருத்துவ குணங்களைக் கொண்ட இலைகள் ஊறிய நீர் பொழிவும், மேலும் அங்குள்ள வனங்களில் மலைப்பாம்புகள் அந்த நீரில் அடிக்கடி நீந்தி செல்வதால், அதன் தோலிலிருக்கும் ஒரு மெழுகுதன்மை வாய்ந்த சுரப்பு கலந்த அந்த அருவி நீர் தொழுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது எனவும் அத்தகைய நீரில் அவர் 48 நாட்கள் குளித்ததால் அவரின் தொழுநோய் நீங்கும். அதோடு குற்றாலநாதர் இறைவனை வழிபடுவதால் அனைத்து வினைகளும் ஒருவருக்கு நீங்கும் என்பதால் தான், அவருக்கு இந்த அருள்வாக்கை தாம் தந்ததாக” அகத்திய சித்தர் அந்த ஜீவ நாடியில் கூறினார். இதைக் கேட்ட அந்த நபர் அகத்திய சித்தரை மனதார பிராத்தித்தார்.

இதையும் படிக்கலாமே:
நாடி ஜோதிடம் பற்றிய இந்த உண்மைகள் எல்லாம் தெரியுமா ?

English Overview:
Here we described about Jeeva nadi jothidam in which Agathiyar suggested a way to cure a disease of a person.