இவர்களுக்கு மட்டும் ஜியோ வின் 6 பைசா திட்டம் தற்போது கிடையாது தெரியுமா ?

Jio

இந்திய மக்கள் அனைவரும் அதிரடியாக மற்ற நெட்ஒர்க்குகளில் இருந்து ஜியோவிற்கு மாறிய காலம் போய், இப்போது ஜியோவில் இருந்து மற்ற நெட்ஒர்க்குகளுக்கு மாறும் காலம் வந்துவிட்டது. அதற்கான முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால், ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற நெட்ஒர்க் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து பேசினால் நிமிடத்திரிக்கு 0.06 பைசா வசூலிக்கப்படும் என்ற ஜியோவின் அறிவிப்பு தான். ஆனால் இந்த ஆறு பைசா திட்டம் சிலருக்கு மட்டும் சில காலம் செல்லாது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஜியோ தற்போது நிமிடத்திற்கு 0.06 பைசா திட்டத்தை அறிவித்திருந்தாலும் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்க்கு முன்பு யாரெல்லாம் ஜியோ ரீசார்ஜ் செய்திருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த ரீச்சார்ஜின் வேலிடிட்டி முடியும் வரை ஆறு பைசா திட்டம் செயல்படுத்த படாது. ஆனால் வேலிடிட்டி முடிந்து அடுத்து அவர்கள் ரீசார்ஜ் செய்யும்பொழுது அவர்கள் மற்ற நெட்ஒர்க் வாடிக்கையாளர்களோடு பேசும் ஒவ்வொரு காலிற்கும் ஆறு பைசா வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பைசா திட்டத்தை ஜியோ பயனாளர்கள் அதிகப்படியாக வெறுத்து வருவதால், ஜியோ சில ஆபர்களை இதற்காக அறிவித்து வருகிறது.

அதன் படி ரூபாய் 10 ற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மற்ற நெட்ஒர்க் வடிக்கையாளர்களோடு நீங்கள் 124 நிமிடங்கள் பேசமுடியும். அதோடு 1 GB டேட்டாவும் வழங்கப்படும். அதே போல ரூபாய் 20 ற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மற்ற நெட்ஒர்க் வடிக்கையாளர்களோடு 249 நிமிடங்கள் பேசமுடியும். அதோடு 2 GB டேட்டாவும் வழங்கப்படும். அதே போல ரூபாய் 50 ற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மற்ற நெட்ஒர்க் வடிக்கையாளர்களோடு நீங்கள் 656 நிமிடங்கள் பேசமுடியும். அதோடு 5 GB டேட்டாவும் வழங்கப்படும். அதே போல ரூபாய் 100 ற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மற்ற நெட்ஒர்க் வடிக்கையாளர்களோடு நீங்கள் 1,362 நிமிடங்கள் பேசமுடியும். அதோடு 10 GB டேட்டாவும் வழங்கப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

இது தவிர புதிதாக ரீசாஜ் செய்த முதல் 7 நாட்களில் ஜியோ பயனாளர்கள் 30 நிமிடங்கள் வரை மற்ற நெட்ஒர்க் வாடிக்கையாளர்களோடு இலவசமாக பேசிக்கொள்ளலாம் என்றும் ஜியோ கூறி உள்ளது. எது எப்படி இருந்தாலும் இலவசம் என்று கூறிவிட்டு இப்போது மக்களை திக்குமுக்காடும் வேலையில் ஜியோ ஈடுபட்டுள்ளதாக கூறி சமூக வளையதலைங்களில் மீம்கள் பறக்கிறது. ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கள் வேறு ஏதாவது நல்ல சலுகையை அறிவிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.