Jio DTH : அதிரடி ஆபர்களுடுன் வரப்போகிறது ரிலையன்ஸ் ஜியோ DTH

Jio DTH
- Advertisement -

தோலை தொடர்பு துறையில் ஜியோ ஒரு மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகை ஆகாது. அதுவரை மிக அதிக விலையில் இருந்த டேட்டா கட்டணங்கள் அனைத்தும் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பிறகு தலைகீழாக மாறியது. இந்த நிலையில் DTH சேவையிலும் இறங்கி உள்ளது ஜியோ.

Jio DTH

தோலை தொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதை போல, DTH மற்றும் லேண்ட்லைன் வழியாக முழு டெலிகாம் வியாபாரத்தையும் தன் வசம் வைத்துக்கொள்ளும் முயற்சியில் மெதுவாக இறங்கி உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. ஆனலும் தோலை தொடர்பு துறையில் அதிரடி காட்டியதை போல DTH துறையில் ரிலையன்ஸ் ஜியோ அதிரடி காட்டுவது சற்று கடினம் தான் என்று வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.

- Advertisement -

ஜியோவை சமாளிக்க பல DTH நிறுவனங்களும் இப்போதில் இருந்தே அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக ஏர்டெல் DTH டிஷ் டீவியோடு இணையுள்ளது. ஒருவேளை இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் DTH வந்தவுடன் முன்பு எப்படி தொலைத்தொடர்பு துறையில் மாற்றங்கள் நிகழ்ந்ததோ அதே போல DTH துறையிலும் அதிகப்படியான மாற்றங்கள் நிகழ அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. ஏன் என்றால் ஜியோ என்றாலே அதிரடி சலுகை என்ற ஒரு மனநிலை இப்போது மக்களிடம் வர துவங்கிவிட்டது. அதோடு DTH கட்டணங்களும் அதிக அளவில் வசூலிக்க படுகிறது என்ற குற்றச்சாட்டையும் பலர் முன்வைக்கின்றனர்.

Jio DTH

தற்சயமும் சில மெட்ரோ நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய DTH சேவைக்கான சோதனை முயற்சியில் இறங்கி உள்ளது. ஜியோ DTH முழுமையாக அனைத்து இடங்களுக்கு வரும்போது பல அற்புதமான பிளான்கள் அதில் அடங்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக DTH , பிராட்பேண்ட், லேண்ட்லைன் உள்ளிட்ட மூன்றையும் சேர்த்து வழங்கி இவை மூன்றுக்கும் சேர்த்து மாதம் 600 ரூபாய் வசூலிக்க படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது வெறும் பிராட்பேண்டிற்கு மட்டுமே சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் 1000 ருபாய் செலவழித்து வரும் நிலையில், பிராட்பேண்டோடு சேர்த்து DTH யும் வெறும் 600 ரூபாய்க்கு கிடைத்தால் பெரும்பாலான மக்கள் ரிலையன்ஸ் ஜியோவிற்கு மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனாலும் ரிலையன்ஸ் ஜியோ இது குறித்து அதிகார பூரவமான தகவலை வெளியிட்ட பிறகு தான் உண்மை நிலவரம் தெரியும்.

- Advertisement -