புதிய ஆபர்களை அறிவித்த ஜியோ – ஆபர் விவரம் இதோ

Jio
- Advertisement -

தொலைத்தொடர்பு துறையை ஜியோவின் வருகைக்கு முன் ஜியோவின் வருகைக்கு பின் என இரண்டாக பிரித்து விடலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திட்டங்களோடு களமிறங்கியது ஜியோ. கால்கள் இலவசம், டேட்டா இலவசம் இப்படி ஏராளமான சலுகைகளை ஆரம்பத்தில் அல்லி வீசியது. ஆனால் தற்போது ஒரு காலிற்கு 6 பைசா என்ற விகிதத்தில் கட்டணங்களை வசூலிக்க தீர்மானித்துள்ளது ஜியோ. அதாவது ஜியோ நெட்ஒர்க்கில் இருந்து வேறு நெட்ஒர்க்கிற்கு அழைத்தால் மட்டும் இந்த கட்டணம் வசூலிக்க படும். அதே சமயத்தில் கால் கட்டணத்திற்கான சில ஆபர்களையும் ஜியோ தற்போது அறிவித்துள்ளது. அது பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

கால்களுக்கு ஜியோ கட்டணம் வசூலித்தாலும், அதற்கு இணையான இணைய சேவையை வழங்குவோம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனாலும் ஜியோ வாடிக்கையாளர்கள் இதை விரும்பவில்லை. ஜியோ குறித்த ஏராளமான மீம்கள் சமூக வளையதளங்களில் பரவியது. இது அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் போன்றவற்றிற்கு சந்தோசத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் ஜியோ மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன் படி, ஜியோ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் முதல் 30 நிமிடங்கள் இலவசமாக கால் பேசலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு டாக் டைம் குறித்த சில ஆபர்களும் வெளிவந்துள்ளது. அதன் படி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 24 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். அதே போல 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 249 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம், 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கால்கள் அனைத்தும் இலவசம் என்று நண்பி ஜியோ சிம்மை வாகிய வாடிக்கையாளர்களுக்கு இது பேரிடியாக உள்ளது. இந்த நிலையில், ஏர்டெல், வோடஃபோன் போன்ற போட்டி நிறுவனங்கள், இது போன்ற எந்த கால் கட்டணங்களையும் அறிவிக்கவில்லை. அதோடு எங்கள் அன்லிமிடெட் பிளானில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் மக்கள் ஏர்டெல், வோடஃபோன் போன்றவற்றிற்கு மாறுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -