ஜியோவில் பழைய சலுகை விலைக்கே ரீசார்ஜ் செய்ய முடியும் தெரியுமா?

Jio

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் உபயோகிப்பாளர்கள் தங்களின் ப்ரீபெய்டு சலுகைகளை முன் இருந்த அதே விலைக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

Jio

ரிலையன்ஸ் ஜியோ-வில் புதிதாக ஒரு ஆஃபர் வெளியானது. ஆல்-இன்-ஒன் என்ற பெயரில் அறிவித்த சலுகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புதிய சலுகைகளின் பலன்கள் மும்மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவித்தது இந்நிலையில் அதன் சலுகை விலையில் நாற்பது சதவீதம் அதிகரிக்கபட்டது.

இப்போது புதிதாக வெளியாகியிருக்கும் தகவலின்படி ஜியோ உபயோகிப்பாளர்கள் தங்களின் பழைய சலுகைகளுக்கான விலையில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். அவ்வாறு ரீசார்ஜ் செய்வதற்கு அதன் உபயோகிப்பாளர்கள் எந்த சலுகையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

jio-myplan

இச்சலுகை மை பிளானில் எந்த சலுகையையும் உபயோகிக்காத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே ஜியோ சலுகையை உபயோகிப்பவர்கள் பழையை விலையில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியாது.

 jio-tariff-protection

உங்களின் ஜியோ ஆப் இல், மை பிளானில் எந்தவித சலுகையும் ஆக்டிவேட்டில் இருக்கக்கூடாது. காலியாக இருக்க வேண்டும். அப்படி எந்த சலுகையையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் இணையத்தில் கூகுள் க்ரோமில் லாக் இன் செய்ய வேண்டும். பின்னர் மொபிலிட்டியை தேர்வு செய்து உங்களின் அந்த குறிப்பிட்ட ஜியோ நம்பரை பதிவு செய்யவும். அந்த எண்ணிற்கு வரும் 6 டிஜிட் பின்(OTP) நம்பரை கொடுத்து திறந்து கொள்ளவும். அதில் இருக்கும் செட்டிங்ஸ்-இல் டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷனை ஒரு முறை அழுதினால் போதும். முன்னர் இருந்த அதே பழைய சலுகை பட்டியல் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்ய முடியும்.