ஜோதிடம் : உங்களுக்கு என்ன வேலை, தொழில் அமையும் என்பது பற்றி கூறும் ஜாதக அமைப்பு

job

செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கிணங்க நியாயமான முறையில் செல்வம் ஈட்ட உலகத்தினர் பல வகையான தொழில்களை செய்கின்றனர். நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்வில் அத்தனை விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் மனிதர்கள் பொருளீட்ட செய்யும் தொழில்களும் அக்கிரகங்களின் நிலைகேற்றவாறு அவர்களுக்கு அமைகின்றன. அந்த வகையில் ஜாதகத்தில் எத்தகைய அமைப்புகளால் எந்த வகையான தொழில் அல்லது வேலை ஒருவருக்கு அமையும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் 12 வீடுகளில் வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை தரும் வீடு லக்னத்தில் இருந்து 10 ஆவதாக இருக்கும் வீடான ஜீவனாதிபதி வீடாகும். இந்த ஜீவனாதிபதி வீடாக அமையப்பெறும் ராசியின் கிரகம் மற்றும் லக்னம் எனப்படும் முதல் வீட்டிற்குரிய கிரகம் மற்றும் 7 ஆம் வீட்டிற்குரிய கிரகம் ஆகிய மூன்று கிரகங்கள் சேர்ந்து ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது இந்த மூன்று கிரகங்களும் சமமான பார்வை பெற்றாலோ அந்த ஜாதகர் எந்நேரமும் பொது மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் படியான பணிகள், வேலைகளில் இருப்பார்.

கிராம பஞ்சாயத்து தலைவர், ஊர் தலைவர், மக்கள் தொடர்பு துறை, அரசியல் கட்சிகளில் மாவட்ட தலைவர் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேற்கண்ட ஜாதக அமைப்புகளில் ஒன்று இருக்க கூடும் என்பது அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது.

Cook Apprentice

ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் வீட்டிற்குரிய கிரகம், 7 ஆம் வீடு அதிபதி அல்லது கிரகம், 10 ஆம் வீடு அதிபதி அல்லது கிரகம், சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் அல்லது இந்த கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்வை பெற்றாலும் அந்த ஜாதகர் சமையல் கலை வல்லுனராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் ஓட்டல் உரிமையாளர், உணவு உற்பத்தியாளர், உணவு பதப்படுத்தும் தொழில், உணவு தொழில் ஒப்பந்த தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவராக இருப்பார்கள்.

- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் முதல் வீடான லக்னத்திற்கு அதிபதியாக இருக்கும் கிரகம் அந்த ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிலும், அந்த 7 ஆம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திலும் இருந்தால் அந்த ஜாதகருக்கு சமூக சேவை மனப்பான்மை அதிகம் இருக்கும். பிறருக்கு உதவும் வகையிலான சமூக சேவை பணிகளில் அதிகம் ஈடுபடுவார்கள். இத்தகைய ஜாதகம் கொண்டவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி புரியும் நண்பர்களும் அதிகம் இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:
பாதக கிரக தோஷங்கள் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Job jathagam in Tamil. It is also called as Jathagam amaippu in Tamil or Jeevana sthanam jothidam in Tamil or Lagnadhipathi in Tamil or Jeevana sthanam in Tamil.