வீட்டில் மகாலட்சுமியின் ஸ்வரூபமான ஸ்வர்ணம் ஏன் சேரவில்லை?

gold-lakshmi

ஸ்வர்ணம் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக கருதப்படுகிறது. அதற்குரிய மரியாதையை செலுத்தினால்தான் அது நம்மிடம் தங்கும். அதன் மதிப்பை உணர்ந்து அதனை சரியான முறையில் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

Gold rate in Saravana stores

தங்க நகையை முதலில் கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. அதற்குரிய பெட்டிகளில் தான் வைக்க வேண்டும். பின்னர் அதை பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். அதை விடுத்து நமக்கு எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு கழட்டி வைப்பது தவறான ஒரு பழக்கமாகும். தூங்கும்போது இடைஞ்சலாக இருக்கிறது என்று தலையணைக்குள் வைப்பது கூடாது. நம் வசதிக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் கழட்டி வைப்பது கூடாது. அதுபோல் தங்க நகை அணியும் போது அதனை பற்களால் கடித்து எச்சில் செய்யக்கூடாது. அதற்குரிய ஆயுதம் கொண்டு தான் இறுக்கிக் கொள்ள வேண்டும். அது மகாலட்சுமியை அவமதிக்கும் செயலாகும். இப்படி செய்தால் தங்கநகை நம்மிடம் சேராது.

தங்க நகையை அடகு வைப்பது என்பது தவறான ஒரு பழக்கம். வேறுவழி இல்லை என்கின்ற பட்சத்தில் அடகு வைக்கலாம் ஆனால் நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மட்டும் வைத்தால் போதும். அதற்கு மேல் அதிக தொகைக்கு நாம் வைப்பதால் அதனை மீட்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படலாம். அதனால் ஸ்வர்ணத்தை வேண்டாம் என்று அடகுவைக்க வைப்பதை முடிந்த அளவிற்கு தவிர்க்கப்பாருங்கள்.

Gold rate in Saravana stores

தங்க நகையை இரவல் வாங்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது. இது மிக தவறான ஒரு முறையாகும். பெண்கள் விளக்கு வைத்த பிறகு பால், தயிர் உப்பு ஆகியவற்றை தானமாக கட்டாயம் கொடுக்கவே கூடாது. அப்படி செய்தால் மகாலக்ஷ்மியின் அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்காது. விளக்கு வைத்த பிறகு நகைகளை கழட்டவே கூடாது. கழட்டி வைப்பதானால் விளக்கு வைப்பதற்கு முன்பே நீங்கள் அதை செய்து கொள்ள வேண்டும். இரவல் வாங்கப்படும் தங்க நகையால் தங்கம் சேராமல் போகும் வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

நீங்கள் தங்கநகைக்காக சீட்டு போடுகிறீர்கள் என்றால் அந்த பணத்தில் தங்க நகை தான் வாங்க வேண்டும். அதை விடுத்து வேறொரு செலவிற்கு அதை உபயோகப்படுத்தினால் கட்டாயம் உங்களிடம் தங்கம் சேராது. எதற்காக அந்த பணத்தை சேகரிக்கிறோமோ அதை தான் வாங்க வேண்டும். இல்லையென்றால் தங்கநகை சேராமல் மீண்டும் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அமையாமல் போகலாம்.

Today Gold rate

வீட்டிலிருக்கும் எந்த பொருளும் முழுவதுமாக காலியாகும் வரை கொண்டு போகாதீர்கள். எதையும் துடைத்து வைக்காதீர்கள். எப்போதும் சிறிதளவாவது இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக உப்பு, அரிசி, ஊறுகாய், பேரிச்சை பழம் இவை காலியாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஸ்வர்ணம் சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அதுபோல் ஸ்வர்ணத்தில் நாம் அணிந்திருக்கும் நகைகளில் சுத்தம் தேவை. சுத்தம் செய்ய வேண்டிய நாள் புதன் அல்லது வெள்ளி ஆகும். இவ்விரு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நாம் நகை சுத்தப்படுத்திய அணிந்து கொள்ளலாம். அதில் அழுக்கு சேருவதை தவிர்க்க வேண்டும்.

Today Gold rate

பூஜை செய்வது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, தூபம் போடுவது இவற்றால் மட்டும் செல்வமும், ஸ்வர்ணமும் நம்மிடம் தங்குவதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் கூட செல்வம் அல்லது ஸ்வர்ணம் சேராமல் போகும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தங்கத்திற்கு உரிய மரியாதையைக் கொடுத்து அதை பத்திரமாக பாதுகாத்து மேலும் மேலும் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஐயப்ப பக்தர்கள்: செய்ய வேண்டியதும்? செய்யக் கூடாததும்?

English Overview:
Here we have Vettil swarnam athigarikka. Vettil thangam sera. Vettil thangam thanga. Vettil swarnam sera.