நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தானே திருமணம் செய்கிறோம்? பிறகு ஏன் மனமுறிவு அதிகரிக்கிறது? நாள், நட்சத்திரம் பார்த்து என்ன தான் பயன்?

marraige-astro
- Advertisement -

முந்தைய காலங்களில் இருந்த ஜோதிடர்களும், நல்ல நேரம் பார்த்து கூறுபவர்களும் மிக சரியாக நேர்த்தியாக பார்த்து பார்த்து நாளையும், நட்சத்திரத்தையும் கணித்து பலன் கூறி வந்தனர். அந்த காலங்களில் இருப்பது போன்று இந்த காலங்களில் அவ்வளவு பொறுப்புடனும், திறமையான ஜோதிடர்களும் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? இல்லை தானே? நாள், நட்சத்திரம் பார்த்து என்ன பயன்? எப்படி இவற்றை கணிக்கின்றனர்? என்று பெரும்பாலானவர்கள் மனதில் இருக்கும் இந்த கேள்விக்கான விடையை தான் இப்பதிவின் மூலம் அலச இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நல்ல நாள் குறிப்பது, முகூர்த்தம் குறிப்பது போன்றவற்றின் அடிப்படை புரிதல் பஞ்சாங்கத்தின் மூலம், வானியல் அறிவின் மூலம் அந்த காலத்தில் உள்ளவர்கள் ஞானம் பெற்று இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு நாளுக்கும் கூட நல்ல நேரத்தை அளவுகோல் வைத்து கணித்தது போல கணித்து வந்தனர். உதாரணத்திற்கு வாஸ்து செய்ய நல்ல நாள் என்று காலண்டரில் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மற்ற நாட்களில் இருக்கும் கிழமை, திதி, நட்சத்திரம், யோகம் போன்ற நேரங்களில் வாஸ்து பகவான் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் போட்டுவிட்டு நித்திரை கொள்ளும் நேரமாக இருக்கிறது. இதனால் தான் வாசக்கால் வைப்பது முதல் கிரகப்பிரவேசம் செய்வது வரை சூரிய உதயத்தை பார்த்து எந்த நாளில் செய்தால் ஓஹோ… என்று வருவார்கள்? என்பதை பொறுப்புடன் கணித்துக் கூறுகின்றனர்.

- Advertisement -

ஒரு இடத்திற்கு நீங்கள் நல்ல விஷயமாக செல்ல வேண்டும், பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு வாரசூலை என்கிற ஒன்றை பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் சூரிய உதயத்தை கணக்கில் வைத்து பத்து மணி நாற்பது நிமிடம் வரை மேற்கு, வட மேற்கு திசை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த நேரத்தில், இந்த திசையில் பிரயாணம் செல்வது சரியாக இருக்காது என்பது தான் இதன் அர்த்தம். இதற்கு பரிகாரமும் அதிலேயே கொடுக்கப்பட்டு இருக்கும். வேறு வழி இல்லாமல் அந்த திசையில், அந்த நேரத்தில் பிரயாணம் மேற்கொள்பவர்கள் சிறிதளவு வெல்லத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு பிரயாணம் மேற்கொள்ளலாம்.

ஒரு விஷயம் வாங்க செல்லும் பொழுது அது பன்மடங்காக பெருக வேண்டும். மீண்டும் மீண்டும் அந்த செயல் நடைபெற வேண்டும் என்றால் நீங்கள் குளிகை நேரத்தில் அதை செய்யலாம். குளிகன் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுபவர், எனவே நகை வாங்குகிறீர்கள் என்றால் அந்த நேரத்தில் வாங்கலாம். மீண்டும் மீண்டும் உங்களை நகை வாங்க செய்யும். அது போல கடன் வாங்குகிறீர்கள் என்றால் குளிகையில் கடனை வாங்க கூடாது. அப்படி வாங்கி விட்டால் நீங்கள் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

ஒரு நாளில் நல்ல நேரம், தோஷமுள்ள நேரம் என்று கலந்து தான் இருக்கும். சாஸ்திர அறிவும், தன்னிடம் வரும் நபர்களுக்கு சரியான நேரத்தையும், காலத்தையும் கணித்து கூற வேண்டும் என்கிற பொறுப்பும் இருப்பவர்கள் குணமுள்ள நாட்களையும், நேரத்தையும் சரியாக கணித்துக் கொடுப்பார்கள். நட்சத்திரங்களில் பாதி நட்சத்திரங்கள் சுகமாகவும், அசுபமாகவும் இருக்கின்றது. அசுப நட்சத்திரம் வரும் நாட்களில் இதை செய்யக்கூடாது என்று பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்களின் சுப பார்வைகள் உங்களுடைய ஜாதகத்தில் இருந்தால் அந்த நட்சத்திரங்களில் உங்களுக்கு தோஷம் இல்லாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 09/01/2023 முதல் 15/01/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

ராகு காலம், எமகண்டம், நல்ல நேரம் போன்றவற்றை பார்க்கும் நாம் பஞ்சாங்கத்தின்படி இருக்கக்கூடிய எவ்வளவோ விஷயங்களை சரியாக கணிக்கிறோமா? என்பது நமக்கு தெரிவதில்லை! முறையான ஜோதிடர்களும், பொறுப்பான ஜோதிடர்களும் பணத்தை எதிர்பார்த்தாலும் தன்னிடம் வரும் நபர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சாஸ்திரங்களையும், பஞ்சாங்கத்தையும் முறையாக கற்றுணர்ந்து நேரம் குறித்தால் அந்த நேரம் நிச்சயம் நல்ல முகூர்த்தமாகத் தான் அமையும். அப்படிப் பட்டவர்களுடைய மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஹிந்து சாஸ்திர ஜோதிடம் ஆகும்.

- Advertisement -