வரும் ஜூன் 21 உலகிற்கு பேரழிவா? மீண்டும் திகிலூட்டும் மாயன் காலண்டர்

calendar
- Advertisement -

2020 ஆம் வருடம் என்பது மிக மிக கடினமான ஒரு வருடம் என்றே கூற வேண்டும். கொரோனா பிரச்சனை தொடங்கியதோ இல்லையோ, அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெட்டுக்கிளி தாக்குதல், இந்தியா சீனா எல்லை பிரச்சனை இப்படி பல பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது 2020 ஜூன் 21 ஆம் தேதியோடு உலகம் அழித்துவிடு என்று ரகசிய கோட்பாட்டாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் கையில் எடுத்துள்ளது மாயன் காலண்டர்.

calendar

டிசம்பர் 12 2012 ஆம் ஆண்டோடு உலகம் அழிந்துவிடும் என்று பரவலாக பேசப்பட்டது நம்மில் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் நாம் தற்போது அதை கடந்து 2020 ஆம் ஆண்டில் வாழ்ந்துவருகிறோம். ஆனால் ரகசிய கோட்பாட்டாளர்கள் கூறுவது என்னவென்றால், நம்முடைய தற்போதைய கிரிகோரியன் காலண்டரில் பிழை இருக்கிறது. ஜூலியன் காலெண்டரின்படி நாம் 2012 ஆம் ஆண்டில் தான் வாழ்ந்து வருகிறோம் என்கிறார்கள்.

- Advertisement -

நாம் தற்போது பயன்படுத்தும் கிரிகோரியன் காலெண்டரானது 1582 ஆம் ஆண்டில் இருந்து தான் பயன்பாட்டில் உள்ளது. அதற்க்கு முன்பு மாயன் காலெண்டரும் ஜூலியன் காலெண்டரும் தான் பயன்பாட்டில் இருந்தது.

Calendar

பூமி சூரியனைச் சுற்றுவதற்கு எடுக்கும் நேரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கிரிகோரியன் காலெண்டருக்கும் இதற்கு முன்னால் இருந்த ஜூலியன் காலெண்டருக்கும், வருடத்தில் 11 நாட்கள் வித்யாசம் உள்ளது. அதாவது ஜூலியன் காலெண்டரோடு ஒப்பிடுகையில் கிரிகோரியன் காலண்டரில் 11 நாட்கள் குறைவாக உள்ளது. இதை சரி செய்வதற்காக, இழந்த 11 நாட்கள் ஜூலியன் காலண்டரில் இருந்து நீக்கப்பட்டு அது கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டது என்கிறார்கள் கோட்பாட்டாளர்கள்.

- Advertisement -

இதுகுறித்து விஞ்ஞானி பாலோ டாகலோகின் பதிவிட்டுள்ள டிவீட்டில், 1752 ஆம் ஆண்டு முதல் அதிகப்படியான பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் காலண்டரில் வருடம் வருடம் நாம் இழந்த 11 நாட்களை சேர்தோமானால், நாம் 8 வருடம் பின்னுக்கு போகவேண்டி இருக்கும். அதாவது 2012 ஆம் ஆண்டிற்கு போக வேண்டி இருக்கும்.

Calendar

1752 முதல் 2020 ஆம் ஆண்டிற்கு இடையில் உள்ள வருடங்களின் எண்ணிக்கை 268. ஒரு வருடத்திற்கு 11 நாட்கள் என்றால் 268 * 11 = 2,948 நாட்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றால் 2,948/365 = 8 வருடங்கள். இதன் அடிப்படையில் டிசம்பர் 12 2012 என்பது ஜூன் 21 2020 என்று அந்த விஞ்ஞானி பதிவிட்டுள்ளார்.

agni-sun

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானி ஒருவர், 2003 ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று சிலர் கதை கட்டிவந்தார்கள். ஆனால் அழியவில்லை. அதனை தொடர்ந்து மாயன் காலண்டர் அடிப்படையில் டிசம்பர் 12 2012 உலகம் அழியும் என்றார்கள் அதுவும் நிகழவில்லை. அதற்க்கு அடுத்தாற்போல் தற்போது 2020 ஆம் ஆண்டை அவர்கள் குறிவைத்துள்ளார்கள். ஆனால் இதற்கெல்லாம் விஞ்ஞான ரீதியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆகையால் இது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -