ஜூலை மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

july month 2024
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மை தரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வருமானம் அதிகமாக இருப்பது போலவே செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலை நிமிர்த்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல செய்திகள் வந்து சேரும். இருப்பினும் தொழில் சார்ந்த புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது தக்க ஆலோசனையுடன் எடுப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு அதைவிட அதிகமாக செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அவை அனைத்தும் சரியாகிவிடும். திருமணம் கைகூடும் யோகம் உள்ளது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும். அதனால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவருக்கு நல்ல வேலை வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருக்கும் போட்டிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய வருமானம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு சுப செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. பிறரிடம் பேசும் பொழுது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வீடு வாகனம் சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.

வேலை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக எந்தவித முயற்சிகளோ அல்லது பெரிய முதலீடோ இந்த மாதத்தில் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய மனிதர்களின் அறிமுகத்தால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சனீஸ்வரரை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. மாத தொடக்கத்தில் தடைகளும் இடுப்பறி நிலையும் இருந்தாலும் பின்னர் சாதகமான சூழ்நிலையே தொடரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கும். யாரிடம் பேசினாலும் பொறுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பேசுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளுக்குரிய வெற்றிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். புதிதாக வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் நல்ல காலம் ஆக திகழும். வேலையில் நீண்ட நாட்கள் ஆக இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உத்வேகத்துடன் செயலாற்றும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. அதே சமயம் அதிக அளவு செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. முயற்சிகள் வெற்றி அடைவதில் தாமதங்கள் ஏற்படும். புதிதாக எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். வீடு வாகனம் வாங்கும் அமைப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். கடனிலிருந்து வெளிவருவதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாக்கும்.

வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கடின உழைப்பிற்கு ஏற்ற பலனே உண்டாக்கும். புதிதாக எந்த முதலிடம் செய்யாமல் இருப்பது நல்லது. தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றி அடையும். சொத்துக்கள் கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமண பேச்சு சாதகமாக முடியும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் உடன் இருப்பவர்களின் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அந்த வேலையை திறப்பட செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று விரும்பிய சலுகைகளை பெறுவீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவைவிட அதிக அளவில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உள்ளது. வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வரவிற்கேற்ற செலவே உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். வீண் வார்த்தைகள் விடாமல் இருப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் இருப்பவர்களை நம்பி வேலையை ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படாது. கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை உண்டாகும். தொழிலில் புதிதாக முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. முயற்சிகளுக்குரிய பலன்கள் கிடைப்பதில் தாமதமாகலாம். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணியின் வழியாக நல்ல காரியங்கள் நடைபெறும். பிறரிடம் பேசும் பொழுது கோபமாக பேசுவதை தவிர்த்தால் நன்மைகள் உண்டாகும். கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். கடின உழைப்பால் உங்களுடைய திறமையை நிரூபித்து எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி தொழிலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள். இதுவரை தொழிலில் வராமல் இருந்த பணமும் வந்து சேரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சோமேஸ்வரரை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகளும் அதற்கு இணையாக ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் அதிஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. வீண் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆதாயம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகளை சமாளித்து வெளியில் வந்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திருமண யோகம் கூடிவரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வங்கி கணக்கில் சேமிப்புத் தொகை உயரும். எந்த விஷயத்தையும் அலட்சியமாக இல்லாமல் சற்று கவனத்துடன் செயலாற்றினால் மேலும் நன்மைகள் உண்டாகும். தாமதங்களை தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வதையோ தொழிலில் அகலக்கால் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தேடி வரும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வரவிற்கேற்ற செலவுகளும் உண்டாகும். மாதத் தொடக்கத்தில் எந்தவித நன்மைகளும் உண்டாகாது. ஏமாற்றங்களே அதிகரிக்கும். மாத இறுதியில் எடுத்த முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழப்பமான சூழ்நிலையில் முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் நிதானத்துடன் செயலாற்ற வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இதுவரை தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் மிகுந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் ஏற்படும். திருமணம் முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து வாங்குவதில் தடைகள் ஏற்படலாம்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. கடினமான உழைப்பிற்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாது. தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் காண்பீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -