- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரம்

ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஒவ்வொரு மாதம் பிறக்கும் பொழுதும் அந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம்.. அப்படி ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த மாதம் சிறப்பாக அமைவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு இறைவனின் அருள் வேண்டுமல்லவா? அதனால் ஜூலை மாதம் நம்முடைய முயற்சிகள் வெற்றி அடைவதற்கும் சிறப்பான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்வதற்கும் கூற வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஜூலை மாத மந்திரம்

ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்புகள் என்பது இருக்கும். அந்த மாதத்தில் எந்த தெய்வத்தை வழிபட்டால் எப்படிப்பட்ட வாழ்க்கை அமையும் என்றும் ஒரு சில குறிப்புகள் இருக்கும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் 17ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் ஜூலை மாதம் முழுவதும் நாம் அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த அம்மனின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்றே கூறலாம்.

- Advertisement -

அந்த வகையில் ஜூலை மாதம் தினமும் நம் உச்சரிக்க வேண்டிய மந்திரமாக கருதப்படுவது அம்மனின் மந்திரம் தான். இந்த மந்திரத்தை ஜூலை மாதம் முழுவதும் தினமும் ஒரே ஒருமுறை மட்டும் முழுமனதோடு அம்பாளை நினைத்துக் கொண்டு கூறினால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. இந்த மந்திரத்தை பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சமயத்திலும் உச்சரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவம் சாப்பிட்ட பிறகு இந்த மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது என்பதால் அசைவம் சாப்பிடுவதற்கு முன்பாகவே இந்த மந்திரத்தை கூறிவிடுவது நல்ல பலனை தரும்.

ஒரு நாள் கூட தவறவிடாமல் தொடர்ச்சியாக நாம் இந்த மந்திரத்தை ஒரு முறை கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சிறப்பான முறையில் வெற்றி பெறுவதோடு நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு நன்மைகள் நம்மை தேடி வரும். இந்த மந்திரத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். முடிந்தவரை காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறினால் கூடுதல் பலன் உண்டாக்கும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாசக்தி நமஹ..”

இதையும் படிக்கலாமே: ஆனி திருமஞ்சன நாளில் வாங்க வேண்டிய பொருட்கள்

மிகவும் சக்தி வாய்ந்த அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு ஜூலை மாதம் முழுவதும் யார் ஒருவர் நம்பிக்கையோடு கூறுகிறார்களோ அவர்களுக்கு அம்மனின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்