கபசுரக் குடிநீர் அருந்துவதால் கொரோனா குணமாகுமா? மத்திய ஆயுஷ் அமைச்சகம் விளக்கம்.

kabasuram

கொரோனா தொற்றின் முதல் அலை ஓய்ந்த சில மாதங்களிலேயே இரண்டாம் அலை வந்து மக்களை பெருமளவில் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா முதல் அலையின் போதே சித்த மருத்துவர்கள் பலர் தங்களுக்கு தெரிந்த மிக சிறந்த மருத்துவ முறைகள் மூலம் மக்கள் பலருக்கு சிகிச்சை அளித்து பலரின் உயிரை காப்பாற்றினர் என்பது நாம் அறிந்ததே. முதல் அலையின் போது சித்த மருத்துவர்கள் பலர் பரிந்துரைத்த ஒன்று தான் கபசுரக் குடிநீர்.

corona

கபசுரக் குடிநீர் எந்த அளவிற்கு கொரோனவை எதிர்த்து செயலாற்றும்? அது கொரோனாவை அழிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்? இப்படியான பல கேள்விகளை சிலர் முன்வைக்கவும் துவங்கினர். இந்த நிலையில் கபசுரக் குடிநீரின் செயல்பாடு குறித்து முழுமையாக ஆராய்ந்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் சில விளக்கங்களை கொடுத்துள்ளது.

அதன் படி, அறிகுறி இல்லாத, லேசான, மிதமான கொரோனா துற்றுள்ளவர்கள் கபசுரக் குடிநீர் அருந்துவதன் மூலம் கொரோனா குணமாகிறது என்றும், இதை அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுமக்களுக்கு கொடுக்கலாம் என்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

herbal drink

ஆய்வுபூர்வமாக தற்போது கபசுரக் குடிரின் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளதால் அரசின் வழிகாட்டுதலின்படி மக்கள் இனி எந்த வித சந்தேகமும் இன்றி, கபசுரக் குடிநீர் நிச்சயம் கொரோனாவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு அருந்தி குணம்பெறலாம்.

முதல் அலையின் போது சித்த மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டது போல தற்போது இரண்டாம் அலையின் போதும் தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களில் அவை விரிவுபடுத்தப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.

corona

சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களில் செகிச்சை பெரும் நோயாளிகள் பெருமளவில் சிறப்பாக குணமடைந்து வீடு திரும்புவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் ஆதி மருத்துவமான இந்த சித்த மருத்துவ முறை, மற்ற மருத்துவ முறைகளுக்கு சளைத்ததல்ல என்பதை இந்த பெருந்தொற்று காலத்தில் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.