வாங்கிய கடனை திருப்பி அடைப்பது ஒரு கஷ்டம் என்றால், மீண்டும் மீண்டும் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தி செல்வது அதைவிட மிகப்பெரிய கஷ்டம். ஆமாங்க, இந்த காலத்தில் தங்கம் பணம், வீடு வாசல் சொத்து சுகம் இல்லாமல் கூட வாழலாம். இந்த கடன் இல்லாமல் ஒரு மனிதரால் வாழவே முடிவதில்லை.
கடன் போராட்டத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இன்று ஒரு எளிமையான பரிகாரத்தை சொல்லப் போகின்றோம். இந்த பரிகாரம் உங்களை 7 வாரத்தில் இருந்து, 7 மாதத்திற்குள் கடன் பிரச்சனையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்து விடும். அந்த சக்தி வாய்ந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
கடன் தீர்க்கும் விநாயகர் வழிபாடு
செவ்வாய்க்கிழமை வரக்கூடிய எமகண்ட நேரத்தில், விநாயகரை வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அந்த நல்லெண்ணையில் 7 கொள்ளு பருப்பை போட்டு தீபம் ஏற்றி, விநாயகர் கோவிலில் வைத்து விடுங்கள்.
ஒரே ஒரு நல்லெண்ணெய் தீபம் அந்த நல்லெண்ணெய்குள் 7 கொள்ளு பருப்பு போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு பன்னீர் ரோஜாக்களை வாங்கி கொடுத்து உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இதோடு கட்டாயமாக அருகம்புல் இருக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு ஏதாவது தடை வரக் கூடிய சூழ்நிலை இருந்தால் கூட, அந்த தடையை தகர்க்க கூடிய வேலையை அந்த சின்ன அருகம்புல் பார்த்துக் கொள்ளும்.
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் காலை 9:00 டு 10:30. இந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, வீட்டிற்கு வந்து ஒரு டப்பாவில் 7 கொள்ளு பருப்பு போட்டு, கடனை அடைப்பதற்கு ஒரு சின்ன தொகையை அந்த டப்பாவில் போட்டு சேர்க்க துவங்குங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.
உங்களுக்கு 1 லட்சம் கடன் இருக்கலாம் 2 லட்சம் கடன் இருக்கலாம், அது அவரவர் வசதியை பொறுத்தது. வீட்டிற்குள் இருக்கும் டப்பாவில் 7 கொள்ளு போட்டு அதில் வெறும் 10 ரூபாயை போட்டு சேமிக்க துவங்கினாலும், நீங்கள் கடனை அடைக்க தேவையான பணம் சீக்கிரம் சேரும் என்பது தான் நம்பிக்கை. இந்த எளிமையான பரிகாரத்தை 7 வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்து வாருங்கள்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட திருச்செந்தூர் முருகன் பரிகாரம்
ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்றால் இடையில் ஒரு சில வாரம் தவிர்க்கப்படும். இருந்தாலும் அந்த வாரத்தை தவிர்த்து விட்டு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். விநாயகரை தொடர்ந்து செவ்வாய் கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்துவர உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.