பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக அமைய வேண்டும் என்றும் அன்றைய நாளில் நாம் நினைக்கக்கூடிய அனைத்து விதமான நல்ல காரியங்களும் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி சுபகாரியங்களை செய்யக்கூடாத நாளாக தான் கரிநாள் திகழ்கிறது. கரிநாளில் எந்தவித சுபகாரியங்களும் செய்யக்கூடாது என்றும் அப்படி செய்தோம் என்றால் அந்த காரியம் நம்மிடம் நிலைக்காது என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கரிநாளில் நாம் எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் காணாமல் போக வழிபாட
எந்தவித சுப காரியங்களையும் கரிநாளில் செய்யக்கூடாது அப்படி செய்தால் அது நல்ல விதமாக அமையாது என்று கூறப்படுகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கையை விட்டு நீங்க கூடிய செயல்களில் கரிநாளில் நம் ஈடுபடும் பொழுது அது நம்மை விட்டு விரைவிலேயே வெளியேறும் என்றும் ஒரு கூற்று நிலவுகிறது. அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக நம்மை விட்டு நீங்க வேண்டிய ஒன்று என்றால் அது நாம் வாங்கிய கடன் தான். அந்த கடனை கரிநாளில் நாம் அடைப்பதன் மூலம் கடன் நம்மை விட்டுச் சென்று விடும் என்று கூறலாம். அப்படிப்பட்ட கடன் நம்மை விட்டு செல்ல கரிநாளில் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கரிநாள் வருகிறது. அன்றைய நாளில் நாம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குளிகை நேரத்தில் நாம் கடனை திருப்பி அடைத்தோம் என்றால் விரைவிலேயே அந்த கடன் பிரச்சனை தீரும் என்றும் கூறலாம். குளிகை நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் திரும்பத் திரும்ப செய்வதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும் என்பதால் குளிகை நேரத்தில் நம் கடனை அடைக்கும் பொழுது அந்த கடனை நாம் திரும்ப அடைத்து விரைவிலேயே கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வந்துவிடலாம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி குளிகை நேரம் என்பது மதியம் 1:30 மணியிலிருந்து 3:00 மணிக்குள் வருகிறது. இந்த நேரத்தில் கடன் பிரச்சினை தீர்ப்பதற்காக செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பார்ப்போம்.
குளிகை நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு அகல் விளக்கு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய பிரியாணி இலையை எடுத்து அதில் உங்களுக்கு எவ்வளவு தொகை கடனாக இருக்கிறதோ அந்த தொகையை ஸ்கெட்ச், மார்க்கர் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி எழுதி கொள்ளுங்கள். பிறகு அந்த இலையின் மீது சுத்தமான புழுகை தடவி சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இலையை தீபத்திற்கு முன்பாக வைத்துவிட்டு பின்வரும் இந்த மந்திரத்தை 51 முறை முழு மனதோடு உச்சரிக்க வேண்டும்.
51 முறை உச்சரித்த பிறகு நாம் யாரிடமிருந்து கடனை வாங்கினோமோ அந்த கடனை குளிகை நேரத்தில் சிறிதளவாவது திருப்பி செலுத்த வேண்டும் அல்லது வட்டியையாவது திருப்பி செலுத்த வேண்டும். ஒருவேளை கடனை திருப்பி செலுத்துவதற்குரிய பணம் இல்லை வட்டியை செலுத்துவதற்குரிய பணமும் இல்லை என்பவர்கள் ஒரு பத்து ரூபாயாவது எடுத்து ஒரு கவரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு நாம் கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று முழு மனதோடு வழிபாடு செய்துவிட்டு அந்த பிரியாணி இலையை தீபத்தில் காட்டி எரித்து விட வேண்டும். இப்படி கரிநாளில் வரக்கூடிய குளிகை நேரத்தில் நாம் செய்வதன் மூலம் விரிவிலேயே கடன் பிரச்சனை தீரும்.
மந்திரம்
” ஓம் சகல தேவதா வசிய வசிய சகல தோஷ நிவர்த்தியர்த்தம் தன சக்தி காரிய சக்தி ப்ராத்தத்தம் “
இதையும் படிக்கலாமே:
எளிமையான இந்த வழிபாட்டு முறையை முழுமனதோடு கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்ற எண்ணத்துடன் யார் ஒருவர் கரி நாளில் வரக்கூடிய குளிகை நேரத்தில் செய்கிறார்களோ அவர்களுக்கு விரைவில் ஏதாவது ஒரு ரூபத்தில் கடனை அடைப்பதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.