இந்த 3 பொருட்களை சேர்த்து உங்கள் நில வாசப்படியில் கட்டிவிட்டால் போதும். கடன் கேட்டு உங்கள் வீட்டிற்குள்ளும் யாரும் வர மாட்டாங்க! நீங்களும் கடன் கேட்டு யார் வீட்டிற்கும் போகும் சூழ்நிலை ஏற்படாது.

kadan

அட எத்தனை பரிகாரங்களை பார்த்தாலும், எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், நம்மிடம் இருக்கும் பணம் ஏதாவது ஒரு வகையில் வெளியே சென்று விடுகிறது. தேவையில்லாத பிரச்சினையில் நாம் மாட்டிக் கொண்டு, நாம் அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இந்த நிலைமை நமக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால், அனாவசியமாக யாரும் வந்து நம்மிடம் பணம் கேட்டு நம்மை சங்கட படுத்த கூடாது. நாமும் அடுத்தவர்களிடம் பணத்தை கேட்டு, அடுத்தவர்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது. இயல்பாக எல்லோரது வாழ்க்கையிலும் தினசரி நடக்கக்கூடிய காரியம்தான் இது.

kadan

நாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் இப்படிப்பட்ட பிரச்சனையை கட்டாயம் தினம் தினம் சந்தித்து வருகின்றோம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றால், உங்கள் நில வாசப்படியில் இந்த மூன்று பொருட்களை சேர்த்துக் கட்டவேண்டும். அது என்ன 3 பொருட்கள், அதை எப்படி கட்ட வேண்டும், என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சிறிதளவு படிகார கல் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மூங்கில் குச்சி ஒன்று அவ்வளவு தான். இந்த மூன்று பொருட்களையும் ஞாயிற்றுக்கிழமை அன்று வாங்கி, ஒரு சதுர வடிவில் இருக்கும் மஞ்சள் துணியில் வைத்து மஞ்சள் நூலை போட்டு மூன்று முடிச்சு போட்டு கட்டிக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பாதங்களுக்கு கீழே, இந்த முடிச்சை வைத்து விடுங்கள்.

bamboo tree

இந்த முடிச்சை வைத்த நாள் முதல், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரும் வரை, தினமும் ஒரு நெய் தீபம் ஏற்றி உங்களால் முடிந்த ஒரு பிரசாதத்தை வைத்து, மகா லட்சுமி தாயாருக்கு தினம் தோறும் மாலை 6 மணிக்கு பூஜை செய்ய வேண்டும். அப்போது ஊதுவத்தி கதூபத்தை இந்த முழுசுக்கும் காட்டிக் கொள்ளவேண்டும். பிரச்சினையில் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. என்ற வேண்டுதலோடு. ஆடம்பர பூஜை வேண்டாம். சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜையை உங்கள் வீட்டில் எப்படி செய்வீர்களோ அதேபோல் செய்தாலே போதும்.

- Advertisement -

ஒரு வாரம் முடிந்து, அடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே நீங்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு தயாராகி, 6 மணிக்கு முன்பாகவே மகாலட்சுமியை நினைத்து வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை போல் செய்து விட்டு, அதன் பின் அந்த முடிச்சை எடுத்து உங்களில் வாசப்படியில் மாட்டி விடுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் சுவாமி கும்பிடும் போது அந்த முடிச்சுக்கும் ஊதுபத்தி தூபம் காட்ட வேண்டும். அவ்வளவு தான்.

manjal-mudichu

பண சம்மந்தப்பட்ட பிரச்சனை உங்கள் நில வாசல் படிக்குள் நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக வைத்தால் அதனுடைய பலன் வேறு. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து, மகாலட்சுமி பாதங்களில் வைத்து, பூஜை செய்துள்ளதால் இதனுடைய சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நிச்சயம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ளவே மாட்டீர்கள். ஏதாவது ஒரு விதத்தில் யாராவது, உங்களுக்கு மாகாலட்சுமி ரூபத்தில் வந்து காப்பாற்றி விடுவார்கள், என்ற ஆணித்தரமான கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தமிழரின் பாரம்பரிய வாசனை திரவியம் ஜவ்வாதுவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.