கலங்க வைக்கும் கடனைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிடும் சக்திவாய்ந்த தீப வழிபாடு. இதை செய்பவர்கள் கடனாளியாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

நம்முடைய வீட்டில் அன்றாடம் தீபமேற்றி வழிபடும் எல்லா வழிபாடுமே சக்தி வாய்ந்த வழிபாடுகள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருப்பினும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர பரிகாரத்திற்கு சொல்லக்கூடிய தீப வழிபாடுகளுக்கு அதீத சக்தி உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை வெறும் தீபம் என்று நினைத்து மட்டும் ஏற்றாமல் உங்கள் கஷ்டத்தை நெருப்பில் போட்டு பொசுக்குவது போல நினைத்து மனதில் உறுதியோடு தீபத்தை ஒளிர விட வேண்டும். இப்படி ஒரு மன உறுதியோடு தீப வழிபாட்டை செய்தால் மட்டுமே பரிகார தீபம் கைமேல் பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

deepam8

நம்மில் பெரும்பான்மையினருக்கு பெரிய கஷ்டம் என்றால், அது இன்றைய சூழ்நிலையில் கடன் கஷ்டமாகத்தான் இருக்கின்றது அல்லவா? இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரத்தை செய்தும் பலனில்லை என்று சிந்திப்பவர்கள் கூட, தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகள் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

வெற்றிக்கும், மன பலத்திற்கும், விடா முயற்சிக்கும், உறுதிக்கும் உதாரணமாக இருப்பது அனுமன். ஜெய் ஆஞ்சநேயா என்று தொடர்ந்து மனதார சொல்லி பாருங்கள்! உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு உத்வேகமும் ஒரு சுறுசுறுப்பும் வந்துவிடும். இந்த ஹனுமனை வேண்டித்தான் இந்த தீப வழிபாடும் சொல்லப்பட்டுள்ளது.

hanuman-lingam1

மூன்று வாரம் சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். முடிந்தால் ஹனுமான் சன்னதி இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த தீபத்தை ஏற்றலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே அனுமனை நினைத்து தீபம் ஏற்றுங்கள். ஒரு பித்தளை தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு வெற்றிலைகளை காம்போடு வைத்துவிடுங்கள். அதன் மேலே மண் அகல் தீபங்களை வைத்துவிட்டது கடுகு எண்ணெயை ஊற்றி அந்த எண்ணெயில் இரண்டு கிராம்பு இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை போட்டு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

இதோடு சேர்த்து ஹனுமனுக்கு கொஞ்சமாக வெண்ணை வாங்கி நிவேதனமாகப் படைக்கலாம். வெண்ணை உருகி கரைவது போல, நிச்சயமாக உங்களது கடன் கரைந்து போவதை உங்களால் காண முடியும். இந்த தீபத்தை ஏற்றிய நாள் முதல் கடன் தொகையை திருப்பிக் கொடுக்கத் தேவையான முயற்சிகளை நீங்கள் தைரியத்தோடு மேற்கொள்வீர்கள். உங்களுடைய மனது கடனை திருப்பி அடைக்காமல் ஓயவே ஓயாது.

butter-vennai

இதோடு தீபம் ஏற்றும் நாள், ஏற்றாத நாள் என்ற எந்தக் கணக்கும் கிடையாது. உங்கள் மனதுக்குள் ‘ஜெய் ஆஞ்சநேயா! ஜெய் ஆஞ்சநேயா!’ என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆஞ்சநேயா என்ற வார்த்தையை அடிவயிற்றிலிருந்து உச்சரித்து பாருங்கள்.

kadugu 4-compressed

உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு உத்வேகம் வந்து, உங்கள் கடனை திருப்பிக்கொடுக்க நெருப்பு போல வேலை செய்து, எல்லா கடனையும் கூடியவிரைவில் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதன்பின்பு ஜெயம் உங்கள் பக்கம், அதற்கான நல்ல நேரமும் காலமும் உங்களுக்கு கை கொடுப்பதற்காகத் தான் இந்த தீப வழிபாடு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.