- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினையை தீர்க்கும் கந்த சஷ்டி பரிகாரம்

கடன் பிரச்சினையை தீர்க்கும் கந்த சஷ்டி பரிகாரம்

- Advertisement -

முருகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான முக்கியமான நாட்கள் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்பு மிகுந்த நாளாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. ஆறு நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய இந்த கந்த சஷ்டி விரத நாட்களில் பெரும்பாலும் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக தான் பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

கந்த சஷ்டி பரிகாரம்

அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வாழ்க்கையில் தீராத கஷ்டத்தால் பாதிக்கப்பட்டு இருப்பின் அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்து முருகப்பெருமானுக்கு ஆறு நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது முருக பெருமான் எப்படி சூரசம்ஹாரம் செய்தாரோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் அழித்து நமக்கு மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை அருள்வார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை கடன் பிரச்சினை தீர்வதற்காக கந்த சஷ்டி விரத நாட்களில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாகவே கந்த சஷ்டி விரத நாட்களான ஆறு நாட்களும் பலரும் மிளகை மட்டும் உண்டு கடுமையான விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். மிளகு எப்படி நம் உடலில் இருக்கக்கூடிய அசுத்தத்தை நீக்கி சுத்தத்தை தருகிறதோ அதேபோல் மிளகு விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது. அப்படிப்பட்ட மிளகை வைத்து தான் நாம் கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பரிகாரத்தை செய்யப் போகிறோம்.

இந்த பரிகாரத்தை அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் அன்றே செய்ய வேண்டும். இதற்கு ஒரு சிறிய அளவிலான கிண்ணம் அல்லது புதிதாக வாங்கிய அகல் விளக்கு வேண்டும். அது நிரம்ப வீட்டு சமையலுக்காக வைத்திருக்கும் மிளகை போட வேண்டும். அந்த மிளகிற்கு மேல் ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். இதை அப்படியே முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். தினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டும் பொழுது இந்த மிளகு மற்றும் ஒரு ரூபாய்க்கும் நாம் ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஆறு நாட்களும் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். முதல் நாள் வைத்த மிளகு அப்படியே கடைசி ஆறு நாள் வரை அதே இடத்தில் இருக்கட்டும். அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இதை விரதம் இருப்பவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று இல்லை. விரதம் இருக்க இயலாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆறாவது நாள் ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்து பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு மிளகை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதோடு கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பண வரவும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கையில் பணம் தாராளமாக புலங்க செய்ய வேண்டிய பரிகாரம்

கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கந்த சஷ்டி விதத்தை மேற்கொள்ளக்கூடிய நாட்களில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன் பிரச்சினையற்ற நிம்மதியான வாழ்க்கையை முருகப்பெருமான் அருள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்