9 வாரம் செவ்வாய்கிழமை இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்களுடைய கர்மாக்கள் குறைந்து, கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வழி கிடைக்கும்.

cash

ஏதோ ஒரு வகையில் நமக்கு கடன் இருப்பதால் தான், இந்த மனித ஜென்மத்தை எடுத்து இருக்கின்றோம். மனிதர்களாக பிறந்தவர்களுக்கு பிறவிக் கடன் என்பது ஒரு புறம் இருக்க, நாம் வாழும் காலங்களில் நமக்கு உண்டாகும் கடன்கள் ஒரு பக்கம் நம் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றது. செய்த பாவங்கள், கர்மவினைகள் இவைகளை வைத்தே ஒருவருடைய வாழ்க்கை தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த ஜென்மத்தில் எதற்காக நமக்கு இத்தனை கடன் என்பது தெரியாது. ஆனால், பூர்வ ஜென்மத்தில் ஏதோ ஒரு பாவத்தை செய்திருக்கின்றோம். அதன் மூலம் வந்தது தான் இந்த கடன் என்பதை மட்டும் நம்மில் பல பேரால் உணர முடியும்.

handycap1

கடனை அடைக்க வேண்டும் என்றால் முதலில் நம் பாவத்தை கழிக்கவேண்டும். கடனை அடைப்பதற்கும் பாவத்தைப் போக்குவதற்கு நம்முடைய சாஸ்திரங்களில் எத்தனையோ வழிகள் உள்ளது. அதில் சில சுலபமான வழிகளை இன்று நாமும் தெரிந்து கொள்வோம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய கடனை அடைப்பதற்கு நீங்களும் இந்த பரிகாரங்களை முயற்சி செய்து பாருங்கள்.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் உங்கள் வீட்டிலேயே உங்களால் இயன்ற அளவு உணவை சமைத்து, அதை உடல் ஊனமுற்றவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் ஊனமுற்றவர்கள் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் எத்தனையோ, ஆதரவு இல்லாமல் தவித்து வருகிறது. குறிப்பாக இன்றைக்கு உலகம் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அன்று உடல் ஊனமுற்றவர்களுக்கு எவ்வளவு அன்னதானத்தை செய்ய முடியுமோ அதை உங்கள் கையாலேயே செய்யுங்கள்.

handycap

வீட்டில் சமைத்து அதை உங்களால் கொண்டு செல்ல முடியவில்லை என்றாலும், சமூக ஆர்வலர்கள் இன்றைக்கு எத்தனையோ பேர் சேவை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் மூலம் இந்த உணவை எப்படியாவது உடல் ஊனமுற்றவர்களுக்கு சேரும்படி செய்து விடுங்கள். இப்படி செய்தால் நிச்சயமாக உங்களுடைய கடன் படிப்படியாக குறையும்.

- Advertisement -

உதவி செய்வது என்று வந்தாகிவிட்டது. அது என்ன செவ்வாய்க்கிழமை? என்ற கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு பரிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால், எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த தானத்தை நீங்கள் சேவையாக செய்யலாம்.

tuesday

‘நானே வருமானம் இல்லாமல் இருக்கேன்!’ நான் எங்கே இருந்து தானதர்மங்கள் செய்வது என்று மட்டும் நினைக்காதீர்கள். எப்போதுமே வாழ்க்கையில் நமக்கு மேலே இருப்பவர்களை பார்க்கக்கூடாது. நம்மைவிட கஷ்டப்படுபவர்கள், நமக்கு கீழே இருப்பவர்களை பாருங்கள். வாழ்க்கை இனிமையாகும்.

maadu

அடுத்தபடியாக வெறும் வெள்ளை சாதத்தை உருண்டை பிடித்து எருமை மாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதை இப்போது தான் செய்யவேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. உங்களால் எப்போது முடியுமோ வீதியில் எருமை மாட்டை பார்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் வெறும் வெள்ளை சாதத்தை உருண்டை பிடித்துக் கொண்டு போய் சாப்பிட கொடுக்கலாம். அந்த வெள்ளை சாதத்தில் உப்பு இனிப்பு காரம் எந்த ஒரு சுவையும் சேர்ந்து இருக்கக்கூடாது.

sangu

இறுதியாக ஒரு விஷயம். வலம்புரி சங்கை தானமாகக் கொடுத்தாலும் நமக்கு கர்மவினைகள் குறையும். கடன் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு பரிசாக, தானமாக வலம்புரி சங்கை கொடுக்கவேண்டும். அந்த தம்பதியர் மணம் முடித்த கையோடு இந்த பரிசை கொடுக்க வேண்டும். முடிந்தால் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் இதையும் செய்து பாருங்கள். சுயநலம் பார்க்காமல், நமக்கு நல்லது வேண்டும் என்று நினைக்காமல் செய்யும் சில காரியங்களின் மூலம், நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணியம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் பின்தொடரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.