நாளை சித்திரை மாத அமாவாசை! கடன் பிரச்சினையை கச்சிதமாக சரிசெய்ய ஒரு கைப்பிடி கல் உப்பை உங்கள் கையால் வீட்டில் இப்படி வையுங்கள்.

amavasai3
- Advertisement -

தமிழ் மாதம் பிறந்து நாளைய தினம் முதல்முறையாக அமாவாசைதிதி வருகிறது. இந்த அமாவாசை தினத்தில் நம் வீட்டில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் தீர, சுலபமான முறையில் கல்லுப்பு பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை வேண்டி நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரத்தின் மூலம் நமக்கு உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பரிகாரத்திற்குள் செல்வோம்.

கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு விஷயம். நாளை அமாவாசை தினம் என்பதால் உங்களுடைய வீட்டில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை தவறாமல் செய்துவிடுங்கள். குறிப்பாக நாளைய தினம் உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தை மனதார நினைத்து குலதெய்வ வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சரி, இப்போது கடன் தீர கல்லுப்பு பரிகாரத்தை பார்த்துவிடுவோம். நாளைய தினம் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். முடியாதவர்கள் மாலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட வேண்டும். ஒரு மஞ்சள் நிற சதுர வடிவில் இருக்கும் துணையே எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய உள்ளங்கையால் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து வைத்து பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை 3 முறை சொல்லி எனக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து விடுங்கள். ஒரே ஒரு பிரியாணி இலையின் மேல் உங்களுடைய கடன் தொகையை எழுதி அந்த கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று எழுத வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு ‘50,000 ரூபாய் கடன் சீக்கிரம் அடையவேண்டும்’ என்று எழுதி இந்த பிரியாணி இலையை கல்லுபோடு வைத்துவிட்டு, இதோடு ஒரே ஒரு வசம்பு துண்டு வைத்து, மஞ்சல் துணியை ஒரு நூலால் முடிச்சுப் போட்டு கட்டிக் உங்களுடைய நிலைப்படியில் வெளிப்பக்கத்தில் கட்டிவிட வேண்டும். அடுத்த மாதம் அமாவாசை அன்று மஞ்சள் துணிக்கு உள்ளே இருக்கக்கூடிய உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும். தண்ணீரில் கரைக்கும் போது உங்களுடைய கடன் கரைவது போல எண்ணிக்கொண்டே உப்பை கரைத்து விடுங்கள்.

ஒவ்வொரு மாதம் அமாவாசை வரும் போதும் பழைய உப்பை தண்ணீரில் கரைத்து விட்டு, புதிய உப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து, மஞ்சள் துணியில் இருக்கக்கூடிய மற்ற பொருட்களை எல்லாம் அப்படியே அந்த மஞ்சள் துணியில் வைத்து, நிலை வாசல்படியில் கட்டிவர உங்களுடைய பண பிரச்சனைகள், கடன் பிரச்சனைக்கு கூடிய விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்.

நகைக்கடன் உள்ளவர்கள் அந்த பிரியாணி இலையில் நகை கடன் தீர வேண்டும் என்று எழுதிக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த சுலபமான ஒரு பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக நீங்கள் எதிர்பாராத நிறைய நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -