ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையாக திகழ்வது கடன் பிரச்சினை தான். கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நம் வாழ்க்கையில் நுழைந்து விடும். பிறகு நிம்மதி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய ஒரு முக்கியமான நாளாக தான் செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. செவ்வாய்க்கிழமையில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் பரிகாரமும் நம்முடைய வாழ்க்கையில் கடன் பிரச்சினையை தீர்க்கும். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று நாம் செய்யக்கூடிய விநாயகர் வழிபாடு கடன் பிரச்சினையை முற்றிலும் நம்முடைய வாழ்க்கையில் இருந்து நீக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பொதுவாகவே செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய சதுர்த்தி, சதுர்த்தசி போன்ற தினங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களை தீர்க்க உதவக்கூடியதாக திகழ்கிறது. சாதாரணமாக நாம் செய்யக்கூடிய வழிபாட்டை சாதாரண சங்கடஹர சதுர்த்தி நாளின் நாம் செய்யக்கூடிய வழிபாட்டை விட மகா சங்கர ஹர சதுர்த்தி அன்று செய்யக்கூடிய வழிபாடு என்பது விரைவில் பலனை தரும். அந்த வகையில் கடன் பிரச்சினை தீர்வதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
சாதாரண சங்கடஹர சதுர்த்தி நாளில் தொடர்ச்சியாக 9 சங்கடஹர சதுர்த்திகள் செய்வதன் பலனை ஒரே மகா சங்கடகர சதுர்த்தி நாளில் செய்வதன் மூலம் நம்மால் பெற முடியும். இதற்கு நமக்கு 108 என்ற எண்ணிக்கையில் செம்பருத்தி இலைகள் வேண்டும். செம்பருத்தி இலை என்பது விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு உகந்த இலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இப்பொழுது 108 என்ற எண்ணிக்கையில் ஒற்றை செம்பருத்தி இலைகளை பறித்து அதை நன்றாக சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக நாட்டு மருந்து கடையில் அஷ்டகந்த சூரணம் என்று விற்கும் அந்த சூரணத்தை வாங்கி வந்து செம்பருத்தி இலைகள் ஒவ்வொன்றிலும் ஓம் என்று எழுதி நன்றாக உலர வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த அஷ்டகந்த சூரணம் கிடைக்கவில்லை என்பவர்கள் ஏலக்காய், பச்சை கற்பூரம், பன்னீர், கிராம்பு புனுகு, ஜவ்வாது, குங்குமப்பூ போன்ற எது தங்களிடம் இருக்கிறதோ அதை சந்தனத்துடன் கலந்து அந்த சந்தனத்தை வைத்து ஓம் என்று எழுதிக் கொள்ள வேண்டும்.
மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் சிலைக்கு பால், தயிர், தேன், உருக்கிய நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை வீட்டில் விநாயகரின் சிலை இல்லை என்பவர்கள் இவை அனைத்தையும் சேர்த்து பஞ்சாமிர்தம் போல் தயார் செய்து விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி நாம் ஓம் என்று எழுதி வைத்திருக்கும் செம்பருத்தி இலைகளை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். 108 போற்றிகள் தெரியாது என்பவர்கள் “ஓம் விக்னேஸ்வராய நமஹ” அல்லது “ஓம் விநாயகரே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி கூட 108 முறை அர்ச்சனை செய்யலாம்.
இவ்வாறு அர்ச்சனை செய்த பிறகு நெய்வேதியமாக தயார் செய்து வைத்திருக்கும் பஞ்சாங்கதத்தை வைத்து இயன்றவர்கள் பூரண கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்றவற்றை வைத்து கற்பூர தீப தூ ப ஆராதனை காட்டி உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த மகா சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று இந்த இலையை வைத்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீரும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.