வருட இறுதி நாளான இந்த சுக்கிரவார தினத்தில் தவறாமல் இதனை மட்டும் செய்திடுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன்கள் மளமளவென குறைய ஆரம்பித்துவிடும்

horai-lakshmi
- Advertisement -

டிசம்பர் 31 2002 வெள்ளிக்கிழமை அன்று இந்த வருடத்தின் இறுதி நாளாகும். இந்தக் நாள் சிவனுக்கு உகந்த பிரதோஷ தினமாகும். இந்த பிரதோஷம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் சிவனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வர துன்பங்கள் தீரும் என்பது ஐதீகமாகும். அதிலும் இன்றைய நாள் இந்த வருடத்தின் இறுதி நாளாக இருப்பதால் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. மக்கள் தங்களுக்கு இருக்கும் துன்பம் தீரவும், கடன் அடையவும் மற்றும் மனதில் இருக்கும் கவலை நீங்கவும் இன்றைய தினத்தில் இரண்டு காரியங்களை தவறாமல் செய்து விட வேண்டும். இதன் மூலம் உங்களின் பிரச்சனைகள் நீங்கி விரைவில் கடன் அடையும். வாருங்கள் அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிவனுக்கு உரிய இந்த சுக்கிரவாரம் பிரதோஷம் தினத்தை விடியற்காலை 03:16 மணி முதல் 05:36 மணிவரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. இந்த நேரத்தில் செய்யப்படும் இந்த பரிகாரம் உங்கள் கடனை அடைக்க கூடியதாக இருக்கிறது. அதற்காக இந்த மைத்ரேய முகுர்த்த நேரத்தில் கடன் வாங்கியவர்களிடம் சிறிதளவு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்தக் கடன் விரைவில் முழுவதுமாக அடைந்து விடும்.

- Advertisement -

ஆனால் வெள்ளிக்கிழமை யோடு வரும் இந்த மைத்ரேய முகூர்த்தம் விடியற்காலையில் வருவதால் அந்த நேரத்தில் இவ்வாறு செய்வது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. எனவே உங்கள் கடன் தொகையில் சிறிது தொகையை ஒரு பச்சை நிற டப்பாவில் வைத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு பச்சை நிற துணியில் வைத்து மடித்து வைக்க வேண்டும். இதனை செய்யும்பொழுது நீங்கள் யாருடைய கடனை அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களின் பெயரை மனதில் நினைத்துக் கொண்டு இதனை செய்து பாருங்கள். கூடிய விரைவில் உங்கள் கடன் முழுவதுமாக அடைந்து விடும்.

அடுத்ததாக காலை 10:39 மணி முதல் மறுநாள் காலை 7:17 மணி முதல் சுக்கிரவார பிரதோஷம் தொடர்கிறது. எனவே வெள்ளிக்கிழமை பூஜையை முடித்த பிறகு பிரதோஷத்திற்கு விரதம் இருப்பவர்கள் அவர்களின் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இன்றைய தினத்தில் அனைத்து கோவில்களிலும் சிவபெருமான், பார்வதி மாற்றம் நந்திதேவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

- Advertisement -

முடிந்தவரை அன்றைய தினம் அனைவரும் சிவபெருமான் கோவிலுக்குச் சென்று இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் 50 விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. இதில் கடன் தீர வேண்டும், மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமான ஒரு பொருளன சந்தனத்தை வாங்கி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சந்தனத்தை வாங்கி கொடுப்பதன் மூலம் அதில் செய்யப்படும் அபிஷேகம் சிறந்த பலனை கொடுக்கிறது. விரைவில் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து மன அமைதி கிடைக்கிறது. அத்துடன் உங்களால் முடிந்தால் வேறு சில பொருட்களையும் அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்து பலன் பெறலாம்.

- Advertisement -