சிவபெருமானுக்கு உரிய தினமாக கருதப்படுவது பிரதோஷ தினம். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பிரதோஷ வேளையில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளை மட்டும் பெற மாட்டோம், அங்கு கூடியிருக்கக் கூடிய அனைத்து தெய்வங்களின், தேவர்களின் அருளையும் நாம் பரிபூரணமாக பெறுவோம். அதனால் தான் பிரதோஷ தினத்தன்று ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
அப்படிப்பட்ட பிரதோஷத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரதோஷமாக திகழ்வது சனி மகா பிரதோஷம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சிவபெருமான் ஆழகால விஷத்தை அருந்திய கிழமை சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வரக்கூடிய பிரதோஷம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த பிரதோஷமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சனி மகா பிரதோஷம் வருகின்ற சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் சிவாலயத்தில் எந்தெந்த பொருட்களை நாம் வாங்கித் தருவதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் சுமை தீர முன்னேற்றம் ஏற்பட
இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமானே. இவரை வணங்கினால் கஷ்டங்கள் அதிகரிக்கும் என்று பலரும் கூறுவார்கள். அது முற்றிலும் உண்மைதான். எந்த அளவிற்கு நம்மால் கஷ்டங்களை அனுபவிக்க முடியுமோ அந்த அளவிற்கு நமக்கு கஷ்டங்களை கொடுத்து அந்த சூழ்நிலையிலும் நாம் அவரை முழுமனதோடு நினைத்து வழிபாடு செய்கிறோமா என்பதை பார்த்து பிறகு நம்முடைய தேவைக்கு மிஞ்சிய அளவு அனைத்தையும் கொடுத்து நம்மை பேரானந்தத்தில் ஆழ்த்தக்கூடிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார்.
ஆனால் பலரும் அதை உணராமல் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். யாரொருவர் தொடர்ச்சியாக பிரதோஷ தினங்களில் விரதம் இருந்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுத்து அந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சனி மகா பிரதோஷ தினத்தன்று நாம் மூன்று பொருட்களை முக்கியமாக வாங்கி தர வேண்டும். இந்த பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள்தான். உங்களால் எவ்வளவு வாங்கித் தர முடியுமோ அவ்வளவு வாங்கி கொடுத்தால் போதும். ஒன்று என்ற வீதத்தில் வாங்கி கொடுத்தால் கூட போதும். அந்த பொருட்கள்தான் எலுமிச்சம் பழம், தேங்காய் மற்றும் நல்லெண்ணெய்.
எலுமிச்சம் பழம் என்பது தேவகனியாக கருதப்படுகிறது. எலுமிச்சம் பழத்திற்கு பல அற்புதமான சக்திகள் இருக்கிறது. அனைத்து விதமான தெய்வ வழிபாட்டிலும் எலுமிச்சம் பழம் என்பது கண்டிப்பாக இடம் பெறும். அப்படிப்பட்ட எலுமிச்சம் பழத்தை நாம் பிரதோஷத்தில் அபிஷேகத்திற்காக வாங்கி தரும்பொழுது அந்த எலுமிச்சை அபிஷேகத்தால் எம பயம் என்பது முற்றிலும் நீங்கும். எம பயம் நீங்கினாலே நமக்கு தைரியம் வந்துவிடும். அந்த தைரியத்தை வைத்து நம்முடைய பிரச்சினைகளை எளிதில் சமாளித்து விடலாம்.
இரண்டாவதாக உள்ளது தேங்காய். இதுவும் அனைத்து தெய்வ வழிபாட்டிலும் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகவும் அடிப்படையான ஒன்றாகவும் திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் ஒற்றுமை இருக்கிறது. சிவபெருமானுக்கு எப்படி மூன்று கண்கள் இருக்கிறதோ, அதேபோலதான் தேங்காய் க்கும் மூன்று கண்கள் இருக்கிறது. தேங்காயை நாம் வாங்கி தருவதன் மூலம் நமக்கு செல்வ வளம் என்பது அதிகரிக்கும் கடன் பிரச்சனை முற்றிலும் தீரும்.
மூன்றாவதாக நல்லெண்ணெய். சனிக்கிழமை என்றாலே அது சனி பகவானுக்குரிய கிழமை. சனிபகவானுக்குரிய எண்ணையாக நல்லெண்ணெய் திகழ்கிறது. இந்த நல்லெண்ணையை சனி மகா பிரதோஷத்தன்று சிவா ஆலயத்தில் இருக்கக்கூடிய விளக்குகளுக்கு ஊற்றுவதற்கு வாங்கித் தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய இருளை நீக்கி வாழ்க்கையை பிரகாசமாக மாற்றுவார் சிவபெருமான் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பூஜை பொருட்கள் சுத்தம் செய்யும் பொழுது செய்யக்கூடாதவை
இந்த மூன்று பொருட்களை மறவாமல் சனி மகா பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்கு வாங்கி தருவதன் மூலம் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமை முற்றிலும் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். செல்வ வளம் உயரும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.