- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தொல்லை தீர வெற்றிலை பரிகாரம்

கடன் தொல்லை தீர வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

இன்று ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி, கிருத்திகை நட்சத்திரம் இதோடு மட்டுமல்லாமல் புரட்டாசி மாதத்தின் ஆறாம் நாள். ஆறு என்பது முருகப்பெருமானுக்கு உகந்த எண்ணாக கருதப்படுகிறது. அதுவும் கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த நாளில் வாராகி அம்மனையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்வதோடு இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினை அனைத்தும் நீங்க ஆரம்பிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

கடன் தொல்லை தீர வெற்றிலை பரிகாரம்

வாராஹி அம்மனை பஞ்சமி திதி அன்று வழிபாடு செய்பவர்கள் பஞ்சமுக தீபம் ஏற்றி வைத்து வாராகி அம்மனுக்குரிய பொருட்களை நெய்வேத்தியமாக வைப்பார்கள். மேலும் சிவப்பு நிற மலர்களால் வாராகி அம்மனுக்கு அர்ச்சனை செய்வார்கள். இதோடு மட்டுமல்லாமல் குங்குமம் மஞ்சள் போன்றவற்றாலும் வாராகி அம்மனின் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்வது என்பது சிறப்பு.

- Advertisement -

இதேபோல் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி முருகப்பெருமானுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் பலரது வழக்கமாக இருக்கும்.

இன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும், வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் அல்லது இவர்கள் இருவரையும் சேர்த்து வணங்குபவர்களாக இருந்தாலும், இவர்கள் இருவரையும் வணங்காதவர்களாக இருந்தாலும் இந்த ஒரு வெற்றிலை பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை தீரும்.

- Advertisement -

மாலை எப்பொழுதும் போல் எந்த தெய்வத்தை வணங்கினாலும் சாம்பிராணி தூபம் என்பது காட்டுவோம். வழிபாடுகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு கற்பூர ஆரத்தி காட்டுவதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கண்டிப்பாக முறையில் சாம்பிராணி போட்டிருக்க வேண்டும். இதற்கு ஒரு வெற்றிலை வேண்டும். அந்த வெற்றிலை கிழியாத நல்ல வெற்றிலையாக இருக்க வேண்டும். இதை மஞ்சள் கலந்த பன்னீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஈரம் இல்லாமல் அந்த வெற்றிலையை துடைத்துக் கொள்ளுங்கள்.

இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கல் உப்பை வைக்க வேண்டும். இந்த உப்பு சமையலுக்கு பயன்படுத்திய உப்பாக இருக்கக் கூடாது. புது பாக்கெட் லிருந்து ஒரு ஸ்பூன் அளவு உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதற்கு மேல் நான்கு மிளகை வைக்க வேண்டும். நான்கு என்பது ராகுவிற்குரிய எண். ராகு தான் நம்முடைய கஷ்டங்களுக்கு காரணமாக திகழ்கிறார். அதனால் நான்கு என்ற எண்ணிக்கையில் மிளகை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு 3 கிராம்பை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது உப்பு சிந்தாத அளவிற்கு வெற்றிலையை நன்றாக மடித்து மஞ்சள் அல்லது வெள்ளை நிற நூலால் கட்டிக் கொள்ளுங்கள். இதை வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாகவோ அல்லது முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாகவோ வைத்து விடுங்கள். பிறகு உங்களுடைய கோரிக்கை என்னவோ கடன் பிரச்சினை என்னவோ அதை கூறி அவை அனைத்தும் நிவர்த்தியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கடைசியாக கற்பூர ஆரத்தி காட்டு காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த வெற்றிலையை வருகின்ற புதன்கிழமை அன்று எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய வெற்றிலை, கல் உப்பு, மிளகு, கிராம்பு இவை அனைத்துமே நமக்கு பணவரவை தரக்கூடியதாகவும் கடனை தீர்க்கக் கூடியதாகவும் திகழ்கிறது என்பதால் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:பண நெருக்கடி போக்கும் பஞ்சமி வழிபாடு

இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமான் மற்றும் வாராகி அம்மனின் அருளால் நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியுடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்