- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனைக் குறைக்கும் எளிமையான ஆன்மீக பரிகாரங்கள்.

கடனைக் குறைக்கும் எளிமையான ஆன்மீக பரிகாரங்கள்.

- Advertisement -

காலமும் நேரமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை கடனாளியாக மாற்றி கஷ்டப்படுத்துகிறது. தினம் தினம் உங்கள் உடம்பைப் பிடித்து தரித்திரம் விலக வேண்டும், எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும், கடன் உங்களை வந்து நெருங்கவே கூடாது என்றால், குளிக்கின்ற தண்ணீரில் தினமும் இந்த ஒரு பொருளை சேர்த்து குளிக்க வேண்டும் அது எந்த ஒரு பொருள். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

கடன் நெருங்காமல் இருக்க பரிகாரம்

தினமும் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து, அதன் பின்பு அந்த நீரைக் கொண்டு குளித்து வர உங்களை கடன் சுமையானது நெருங்கவே நெருங்காது. அதிலும் குறிப்பாக பசும்பால் கிடைத்தால் அதை குளிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கலந்து குளிக்க தொடங்கி பாருங்கள். தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

- Advertisement -

உடம்புக்கு குளித்தாலும் இந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாள் குளித்தால் தீராத கடன் சுமையில் இருப்பவர்கள் கூட அந்த கடன் சுமையிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் குறையும். இது முதல் பரிகாரம்.

அடுத்தபடியாக நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு முருகன் வழிபாடு. செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி அந்த கோவில் பிரகாரத்தை ஆறு முறை வலம் வர வேண்டும். இதுபோல தொடர்ந்து செய்து வர உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விரைவில் தீரும்.

- Advertisement -

அடுத்தபடியாக மாதத்தில் ஒரு நாள் உங்கள் வருமானத்திலிருந்து சின்னத் தொகைக்கு நெய் வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். 200 ரூபாய்க்கு நெய் வாங்கி தானமாக கொடுத்தாலும் சரிதான். ஆனால் அதனை சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும். ஏழையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு குழந்தை இருக்கும், அந்த குழந்தைக்கு அவர்களால் சத்தான ஆகாரத்தை கொடுக்க முடியாது.

அதுபோல இருப்பவர்களுக்கு இந்த நெய்யை நீங்கள் தானம் செய்யுங்கள். அந்த குழந்தைக்கு அவர்கள் அதைக் கொடுக்கும்போது, உங்களுடைய கர்ம வினைகளானது குறைக்கப்பட்டு கடவுள் சுமையிலிருந்து வெளிவருவதற்கு இந்த எளிய பரிகாரம் துணையாக இருக்கும். பசு நெய் வாங்கி தானம் செய்ய வேண்டும் அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வசதி வாய்ப்பு இருப்பவர்கள், உங்களால் முடியும் என்றால் ஆயிரம் ரூபாய்க்கு நெய் வாங்கி ஒரு குழந்தைகள் ஆசிரமத்திற்கு கூட தானம் கொடுக்கலாம். மாதத்தில் ஒரு நாள் பசு நெய் தானம் செய்பவர்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சமானது மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்லும். ஒருபோதும் உங்கள் வீட்டில் வறுமை எட்டி பார்க்காது.

அதேபோல தாந்திரீக பரிகாரங்களில் மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரமானது இது. பட்டை பொடியை வீட்டிற்குள் ஊதி விடுவது. ஒரு பத்து 10 ரூபாய் நோட்டு, அல்லது ரூ. 20 ரூபாய் நோட்டு, ரூ.50 நோட்டு எது இருந்தாலும் கொஞ்சம் புதுசாக இருக்கும் நோட்டை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே கொஞ்சம் பட்டை பொடியை வைத்து வீட்டிற்குள்ளே இதை ஊதி விட வேண்டும். நீங்கள் நிலை வாசலுக்கு வெளியில் நின்று கொண்டு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பட்டை பொடி எப்படி உங்கள் வீட்டிற்குள் பறந்து வருகிறதோ அதுபோல பணம் பல மடங்கு உங்கள் வீட்டிற்குள் பறந்து வரும்.

இதையும் படிக்கலாமே: 11-11 மொத்தக் கடனையும் அடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்

நிறைய பேர் பழைய நோட்டு வைத்திருந்தால் தான் பணம் சேரும் என்று, கிழிந்து போன நசுங்கிப் போன பழைய நோட்டுக்களை பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அதைவிட புது நோட்டை கொண்டு வந்து பர்ஸில் வைத்து பாருங்கள். புது நோட்டை கொண்டு வந்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் அந்த இடத்தில் பணப்புழக்கம் ஆனது மேலும் அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரங்களை பின்பற்றி பண பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கடன் சுமையிலிருந்து விடுபடலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்