கோடி கோடியாக இருக்கும் கடன் பிரச்சினையை கூட தீர்த்து வைக்கும் சக்தி இந்த ஒரு பூவுக்கு உண்டு. அது எந்த பூ? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா!

kadan

கடனை அடைக்க வெறும் ஒரே ஒரு பூ போதும் என்றால், இந்த உலகத்தில் யாருமே கடன்காரர்கள் ஆக இருக்க மாட்டார்கள். கடன் தொல்லையில் சிக்கி தவிக்க மாட்டார்கள். எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள். பிறகு எப்படி இந்த ஒரு பூவை வைத்து கடனை அடைப்பது? நிச்சயமாக முடியும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பரிகாரம் சாத்தியம். சரி, நம்முடைய கடனை அடைப்பதற்கு நமக்கு உதவி செய்யப் போகும் அந்தப் பூ, எந்த பூ? அதை வைத்து தாந்திரிக ரீதியாக என்ன பரிகாரத்தை செய்யலாம் தெரிந்து கொள்வோமா?

kadan1

மருதாணி செடியில் இருக்கக்கூடிய வேர், இலை, காய், எல்லா பொருட்களிலுமே நேர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்துள்ளது. பல மகத்துவங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் செடி தான் இந்த மருதாணி செடி. எல்லோர் வீட்டு வாசலிலும் இருக்கவேண்டிய செடிகளின் வரிசைப் பட்டியலில் இந்த செடிக்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மருதாணி செடியில் பூக்கக்கூடிய மருதாணிப் பூவை வைத்து தான் இன்று நாம் ஒரு பரிகாரத்தை பார்க்கப் போகின்றோம். மருதாணி செடியில் இருந்து உங்கள் கையாலேயே மருதாணி பூவை பறித்து உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

ஒரு வெள்ளைக் காகிதத்தில், சிவப்புநிற பேனாவில் நீங்கள் யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமோ, அவர்களுடைய பெயர், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை, இதை பட்டியலிட்டு அந்த பேப்பரில், இந்த மருதாணி பூவை வைத்து, மடித்து உங்கள் பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பு, மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

kadan

அவ்வளவு தான். தினமும் பூஜை அறையில் சாமி கும்பிடும்போது நீங்கள் வைத்திருக்கும் அந்த பேப்பருக்கு தீபாராதனை காட்ட வேண்டும். தீபமேற்றி மனதார கடன் தீர வேண்டும் என்று அந்த ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் அந்த பேப்பருக்குள் இருக்கும் மருதாணி பூவை மட்டும் மாற்றிவிடுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்து விட்டு உங்களுடைய கடனை அடைக்க வேண்டியதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இதுதான் முக்கியமான விஷயம். வெறும் பரிகாரத்தை செய்து விட்டு, முயற்சி எடுக்காமல், மருதாணிப் பூவே வந்து கடனை அடைத்துக் கொள்ளும் என்று சொல்லக்கூடாது.

கடனை அடைக்க முயற்சி செய்து கொண்டே வரும் பட்சத்தில், உங்களுக்கு எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும், அது படிப்படியாக குறைய தொடங்குவதை சில வாரங்களிலேயே உங்களால் உணரமுடியும். உங்களுடைய முயற்சிகளில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிய கூடிய வேலையை இந்த மருதாணிப் பூ பார்த்துக் கொள்ளும். நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.