இறைவனை தினமும் இப்படி வழிபாடு செய்தால் இறை சக்தியை நீங்கள் சீக்கிரம் உணர முடியும். அந்த இறைவன் உங்கள் கண்களுக்கு காட்சி கொடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

temple-prayer
- Advertisement -

இதிகாசங்கள், புராணங்கள், சினிமா இப்படி கற்பனையான விஷயங்களில் மட்டும் தான் நாம் இறைவனை பார்த்திருக்கின்றோம். இந்த பூமியில் மனித பிறவி எடுத்து நிஜத்தில் இறைவனை நேரடியாக கண்டது கிடையாது. அதாவது சிலையாக திருவுருவப்படமாக இறைவன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று நம் முன்னோர்கள் காட்டிக்கொடுத்த வழியில் வழிபாடு செய்கின்றோம். அந்த இறைவனை இந்த ஜென்மம் நிறைவடைவதற்குள் காண வேண்டும் என்றால், அதாவது இறை சக்தியை உணர வேண்டும் என்றால் தினமும் நம்முடைய வீட்டில் எப்படி இறை வழிபாடு மேற்கொள்வது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக இதோ.

இறைவனை உணர்வது என்பது அவ்வளவு பெரிய கஷ்டம் எல்லாம் கிடையாது. மிக மிக சுலபமான விஷயம். உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான உறவிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள். எப்படி பழகுவீர்களோ அதேபோல இறைவனிடமும் பழக வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய மகனிடமோ உங்களுடைய மகளிடமோ அல்லது உங்களுடைய அம்மா அப்பா சகோதரன் சகோதரி இப்படி உங்களுக்கு பிடித்தமான உறவுடன் நீங்கள் எப்படி உரையாடி தினமும் வாழ்கின்றீர்களோ அதே போல தினம்தோறும் இறைவனிடம் பேசி பழக வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று இறைவனுக்கு வணக்கம் சொல்லி மானசீகமாக மனதார இறைவனிடம் உரையாட வேண்டும். எப்படி காலையில் எழுந்து நம்மை நாமே சுத்தம் செய்து கொள்கிறோமோ அதே போல பூஜை அறையையும் சுத்தம் செய்துவிட்டு, பூஜையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இறைவன் சாப்பிட உங்களால் முடிந்த பிரசாதத்தை வையுங்கள். இரண்டு கற்கண்டு ஒரு பெயரச்சம்பழம் அல்லது ஒரு வாழைப்பழம் இப்படி எதுவாக இருந்தாலும் சரி இறைவன் சாப்பிடுவதற்காக பாசமாக வைத்து விடுங்கள். பிரசாதமாக வைக்க எதுவுமே இல்லாத சமயத்தில் ஒரு டம்பளர் தண்ணீர் வைத்தால் கூட போதும்.

இறைவனுக்கு பஞ்சபாத்திரத்தில் பருகுவதற்காக சுத்தமான தீர்த்தத்தை வையுங்கள். மனதார இறைவனிடம் அன்போடு பாசத்தோடு வாய் விட்டு பேசினாலும் சரி அல்லது மனதோடு பேசினாலும் சரி, உங்களுடைய கஷ்டங்களை நண்பரிடம் பகிர்வது போல பகிர்ந்து கொள்ள வேண்டும். ‘அன்றைய தினத்தில் நீங்கள் எந்தெந்த முக்கியமான வேலைகளை செய்யப் போகிறீர்களோ, அதை எல்லாம் இறைவனிடம் சொல்லி விடுங்கள்’. அதன் பின்பு இறைவனுக்கு நீங்கள் வைத்த பிரசாதத்தை சாப்பிடுவதற்கு கொஞ்சம் நேரமும் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இறைவன் வந்து அந்த பிரசாதத்தை சாப்பிட போறாரா என்ற குதர்க்கமான கேள்விகளை கேட்க வேண்டாம். இறைவனுக்காக வைக்கப்பட்ட பிரசாதத்தில் இனிப்பு சுவையோ, உப்பு சுவையோ, புளிப்பு சுவையோ பெரும்பாலும் குறைவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம் சமைக்கும் போது எல்லாவற்றையும் குறைவாக போட்டு சமைப்பது கிடையாது. இறைவன் ஆத்மார்த்தமாக நீங்கள் வைக்கக் கூடிய பிரசாதத்தை சாப்பிடுகிறார் என்பதே அர்த்தம்.

இறைவனால் சாப்பிடப்பட்ட அந்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணுங்கள். பஞ்ச பாத்திரத்தில் வைத்த தீர்த்தத்தை எல்லோரும் சிறிதளவு பருகுங்கள்.

இறைவன் இருக்கின்றான் என்று முழு நம்பிக்கையோடு நீங்கள் செய்யக்கூடிய இந்த வழிபாட்டு முறை உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் இறை சக்தியை உணர்த்தும். இறைவன் எங்கு இருக்கிறான் என்று இதுவரை கோவில் கோவிலாக தேடிப்போய் வழிபாடு செய்திருப்பீர்கள். ஆனால் மேல் சொன்ன விஷயங்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் பின்பற்றினால் இறைவன் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கின்றான் என்பதை சீக்கிரம் உணரக்கூடிய நேரம் காலத்தை அந்த பகவான் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -