வீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க வேண்டுமா? இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும்.

kadugu

எந்த ஒரு காலத்திலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழவேண்டும் என நினைக்கின்றனர். அப்படி வாழும் நபர்களில் சிலருக்கு அவர்களின் கர்ம வினை காரணமாக வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படவே செய்கிறது. அதிலும் குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் எதிரியாகி தீங்கு செய்யும் நிலை, கிரக தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை போன்றவை ஏற்படுகிறது. இத்தகைய பிராச்சனைகளால் அவதிப்படுகிறவர்கள் அவற்றிலிருந்து விடுபட கூறியிருக்கின்ற ஒரு எளிமையான பரிகார முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் அவை நல்லவை அல்லது தீயவை எப்படியானதாக இருந்தாலும் அவை வலிமை வாய்ந்தவையாக இருக்கின்றன. அதிலும் மனிதர்கள் பெரும்பாலானவர்கள் சக மனிதர்களின் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டு, அவர்களின் வீழ்ச்சியை குறித்த எண்ணங்கள் தொடர்ந்து உருவாக்கும் போது, அவை அவர்கள் வெறுக்கின்ற மனிதர்களின் மீது ஒரு தாக்கத்தை செலுத்தவே செய்கின்றன.

நாம் அனைவருமே நல்ல மற்றும் தீய குணங்கள் நிறைந்த மனிதர்கள் இருக்கும் உலகத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதில் நமக்கு நன்மை செய்பவர் யார், தீமை செய்பவர் யார் என்று முன்பே நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் நமது முகத்திற்கு எதிராக சிரித்து பேசும், மனிதர்கள் பலர் மறைவாக நாம் கஷ்டப்பட வேண்டும் என விரும்புகின்றனர். ஒரு சிலர் அதற்கு மறைமுக மந்திர தந்திர முறைகளில் ஈடுபட்டு பிறரை அழிக்க வேண்டும் நினைக்கின்றனர்.

மேற்கூறிய அனைத்து வகையான பிரச்சனைகளில் இருந்தும் நம்மை மீட்பதற்கு உதவக்கூடிய ஒரு அற்புத தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு பொருள் நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கின்றது. அது தான் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் “கடுகு” ஆகும். “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்கிற பழமொழிக்கு ஏற்ப கடுகு தனக்குள்ளாக பல அற்புத தெய்வீக ஆற்றல்களை கொண்டிருக்கிறது. கடுகு எண்ணெய் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்திய பகுதிகளில் அதிகம் உண்கின்றனர். வேறு பல வீட்டு உபயோகங்களுக்கும் அவர்கள் கடுகு எண்ணையை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் கடுகு எண்ணெய் லட்சுமி கடாட்சம் கொண்டதாக வட இந்தியர்கள் பலர் கருதுகிறார்கள். அவற்றில் சமைத்து உண்பவர்களுக்கு செல்வம் அதிகம் சேரும் என்பது வட இந்தியாவில் வாழ்கின்ற மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

இந்தப் பரிகாரத்தை செய்வதற்கு தூய்மையான கடுகு கொண்டு செய்யப்பட்ட கடுகு எண்ணையை விளக்கு தீபம் போட தேவையான அளவு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தினந்தோறும் மண்ணால் ஆன அகல் விளக்கை கொண்டு, அதில் சுத்தமான பஞ்சுத்திரி போட்டு, அதில் இந்த தூய்மையான கடுகு எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றி, உங்கள் வீட்டின் வெளிப்புற வாயிலின் வலது புறமாக இந்த கடுகு எண்ணை தீபத்தை வைத்து விடவேண்டும். தினந்தோறும் மாலையில் சூரிய ஒளி மறைவதற்கு சற்று முன்பாகவே இந்த தீபத்தை ஏற்றி விடுவது நல்லது.

deepam

பரிகாரத்தை தினந்தோறும் செய்து வருபவர்களின் வீட்டிற்குள்ளாக எத்தகைய தீய சக்திகளும் நுழையாது. மேலும் பிறரின் கண் திருஷ்டிகள், பொறாமைபடுபவர்கள் உங்கள் மீது செலுத்தும் தீய அதிர்வலைகளும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுத்து, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பினை அளிக்கும். இது பலரும் தொடர்ந்து செய்து பலன் பெற்ற ஒரு அனுபவம் பரிகாரமாகும்.