வியாழன் கிழமையில் இந்த விளக்கை நடு ஹாலில் வைத்து ஏற்றினால் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தலை தெறிக்க ஓடி விடும்!

vilakku-pray

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்தவையாக இருக்கும். அந்த வகையில் நம் பிரச்சினைகளை முழுவதுமாக தீர்க்க உதவும் வியாழன் கிழமையில் அனைத்து தெய்வங்களையும் நினைத்து இந்த விளக்கை ஏற்றினால் எவ்வளவு துன்பங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் அவைகள் நமக்கு தெரியாமல் நம்மை விட்டு விலகி விடுவதாக கூறப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sleepless

ஒரு ஊரில் ஒரு கிராமத்திலிருந்து வந்த வசதி படைத்த ஒருவர் தினமும் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். என்னிடம் கோடி கோடியாக செல்வம் இருந்தும் என்னால் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லை என்று மிகவும் வருந்தினார். அவர் காசு கொடுத்து எந்த மருத்துவரை சந்தித்தாலும் அதில் எந்த பயனும் இல்லாமல் போனது. கடைசியாக இறைவனே கதி என்று இறைவனிடம் சரணடைந்த அவருக்கு இறைவன் கூறியது என்ன தெரியுமா?

பணம் காசு என்பது மகிழ்ச்சியை தருமே தவிர நிம்மதியை என்றும் கொடுப்பதில்லை. நிம்மதி பெறுவதற்கு எவ்வளவு விலையை நீ கொடுப்பாய் என்று கேட்டாராம்? கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நிம்மதி என்பது அவ்வளவு எளிதாக யாரும் அமைந்து விடுவதில்லை. நிம்மதியான வாழ்க்கையும், நிம்மதியான தூக்கமும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதை விட ஒரு பெரிய செல்வம் எதுவுமே இல்லை.

praying-god1

ஒவ்வொரு வியாழக்கிழமையும் கடுகு எண்ணெயில் தீபமேற்றி வீட்டின் நடுவில் வைத்து தியான நிலையில் அமர்ந்து குலதெய்வத்தை நினைத்து வா எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது உடனே நிவர்த்தி ஆகும் என்று கூறி இறைவனுடைய அருள் வாக்கை கொடுத்தாராம். அதன்படியே அந்த செல்வந்தர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இதுபோல் செய்து கொண்டு வந்தாராம்.

- Advertisement -

பணம் பணம் என்று பணம் ஈட்டுவதில் குறியாக இருந்த அவருக்கு அந்த ஐந்து நிமிட தியானம் விளக்கொளியில் வந்த இறைவனுடைய திருஉருவம் நிம்மதியை கொடுத்தது. அதன்பிறகு அவருக்கு படித்த உடனேயே உறக்கம் வந்தது. நம் வாழ்க்கையின் இருக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று தான் கூற வேண்டும்.

mantra-thiyanam

5 நிமிடம் தியானத்தில் கிடைக்கும் நிம்மதி ஆனது முழு இறை பக்தியில் எவ்வளவு கிடைக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பதில் நமக்கு நேரம் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய வீட்டின் ஒவ்வொரு வியாழன் கிழமை என்றும் அனைத்து வேகத்தையும் நினைத்து புதிய அகல் விளக்கு ஒன்றை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் மூன்று புறமும் வைத்துக் கொள்ளுங்கள்.

agal vilakku

அதில் சுத்தமான பஞ்சு திரி அல்லது நூல் திரி போட்டு கடுகு எண்ணெயை ஊற்றுங்கள். அகல் விளக்கை சிறிய தாம்பூல தட்டு ஒன்றை வைத்து அதன் மீது வையுங்கள். பின்னர் ஓம் நமச்சிவாய அல்லது ஓம் நமோ நாராயணாய அல்லது ஓம் சரவணபவ என்கிற உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே தீபத்தை ஏற்றுங்கள். அதன் விளக்கு ஒளியை அமைதியாக அமர்ந்து உற்றுப் பாருங்கள்.

vilakku-deepam

நீங்கள் வெறும் தரையில் அமர கூடாது ஏதாவது ஒரு துணியை விரித்து கொண்டு அதன் மீது உட்கார்ந்து பரிகாரம் செய்ய துவங்குங்கள். ஜோதியின் தெரியும் வெளிச்சத்தை 5 நிமிடம் தொடர்ந்து பார்த்தால் போதும் உங்கள் மனதில் இருக்கும் அத்தனை குழப்பங்களும் நீங்கி தெளிவாக சிந்திக்க கூடிய ஆற்றல் பிறக்கும். உங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை உங்கள் கண்களுக்கு இறைவன் தெரியப்படுத்துவார்.