கடுக்காய் ஹேர் பேக்

kadukkai hair pack
- Advertisement -

பலரும் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக திகழ்வதுதான் முடி உதிர்தல். அதிலும் குறிப்பாக 30 வயதிற்கு மேல் கடந்தவர்களுக்கு முடி உதிர்வு என்பது ஏற்பட்டு விட்டால் அது வழுக்கையாவதற்கு கூட வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. முடி உதிர்தல் பல காரணங்களால் ஏற்பட்டாலும் அதை கட்டுக்குள் கொண்டு வந்து வழுக்கை விழாமல் பார்த்துக் கொள்ளவது முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட தலை முடி உதிர்தலை நிறுத்தி வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்க செய்யக்கூடிய ஒரு கடுக்காய் ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி உதிர்களை தடுக்கக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. அவற்றில் வெந்தயம், கற்றாழை, தயிர், கருஞ்சீரகம், முட்டை என்று பலவற்றை சொல்லிக் கொண்டே செல்லலாம். இவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது அந்த சத்துக்களின் பயனால் நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அந்த வகையில் இன்று நாம் கடுக்காய் பொடியை வைத்து எப்படி ஹேர் பேக் செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடுக்காய் பொடியை நம்முடைய தலைக்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்கள் என்பது உறுதியாகும். மேலும் வழுக்கை ஏற்படாத அளவிற்கு இது முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதோடு ஒரு கீற்று கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்து இந்த விழுதை உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடலாம். இதில் நாம் சேர்த்துள்ள கடுக்காய் பொடி நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களை உறுதி செய்யும் என்று ஏற்கனவே நாம் கூறிவிட்டோம்.

- Advertisement -

கற்றாழையானது நம்முடைய உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுத்து முடிக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதே போல் தான் முட்டையின் வெள்ளை கருவை நாம் சேர்ப்பதன் மூலம் இது நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்குகிறது. அடுத்ததாக நாம் இதில் சேர்க்கக்கூடிய தேங்காய் பால் என்பது பல அற்புதமான சத்துக்கள் நிறைந்ததாக திகழ்கிறது. இது நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளருவதற்கு உதவி புரிகிறது. இவை அனைத்தையும் சேர்த்து நாம் ஹேர் பேக்காக போடும்பொழுது இவை அனைத்திற்கு உரிய நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கருமையான அடர்த்தியான கூந்தலை பெற

வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த ஹேர் பேக்கை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தி வர ஒரே மாதத்தில் நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். தலைமுடி அடர்த்தியாகவும், வழுக்கை விழும் என்று பயந்த இடத்தில் கூட புதிய முடி வளர்வதை நம்மால் காண முடியும்.

- Advertisement -