காகம் நம் மீது எச்சில் போட்டால் அது கெட்ட சகுனமா? அடிக்கடி காகம் வீட்டிற்கு வந்து கத்திக் கொண்டே இருப்பதற்கு என்ன காரணம்?

crow
- Advertisement -

கருப்பாக யாரையாவது ஒருவரை நான் பார்த்துவிட்டால் போதும். உடனே அவர்களைப் பார்த்து, காகம் போல இருக்கிறீர்கள் என்று கேலிப் பேச்சு பேசுவோம். ஆனால் மற்ற பறவைகளை விட இந்த காகத்திற்கு திறமைகள் அதிகம். காகத்திற்கு மூன்று காலங்களையும் உணரக்கூடிய அறிவு இருப்பதாக சொல்லப் பட்டுள்ளது. நடந்து முடிந்த விஷயங்களும், காகத்திற்கு நன்றாகவே தெரியும். நடந்து கொண்டிருக்கும் விஷயத்தையும் நன்றாக உணரும். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை உணரும் சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

water-for-crow

குயில் தன்னுடைய முட்டையை காகத்தின் கூட்டில் தான் இட்டு வைக்கும். காகத்திற்கும் அது தன்னுடைய முட்டை அல்ல என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும் அந்த முட்டையை தன்னுடைய கூட்டிலேயே வைத்து குஞ்சு பொரிக்க செய்து, அந்த குயில் பெரிதாகும் வரை அதற்கான இறையையும் காகம் கொடுக்கும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்த விஷயம் தான். இது தன்னுடைய முட்டை அல்ல, தன்னுடைய குஞ்சு அல்ல என்று தெரிந்தும், குயிலின் முட்டையை பாதுகாக்கும் குணம் கொண்ட இந்தக் காகத்தை, பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.

- Advertisement -

இப்படிப்பட்ட பல நல்ல குணங்களை நல்ல சக்தியை தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய இந்த காகம், சில பேருடைய வீட்டிற்கு தொடர்ந்து வந்து கரைந்து கொண்டே இருக்கும். சிலபேர் இதனுடைய சத்தத்தைக் கேட்க பொறுக்காமல் துரத்தி கூட விடுவார்கள். ஆனால் அந்த காகம் மீண்டும் மீண்டும் வந்து அந்த வீட்டின் வாசலிலோ அல்லது ஜன்னல் பக்கத்திலோ கத்திக்கொண்டே இருக்கும்.

Kagam

இதற்கு என்ன அர்த்தம். அந்தக் காகம் உங்களுடைய வீட்டிற்கு ஏதோ ஒரு நல்ல செய்தியை உணர்த்துவதாக தான் அர்த்தம். காகம் அடிக்கடி உங்கள் வீட்டில் வந்து கத்தினால் நிச்சயமாக வரும் காலத்தில், உங்களுக்கு ஏதோ ஒரு நன்மை நடக்கப்போவதை காகம் தன்னுடைய பாஷையில் வெளிப்படுத்துவதாக சொல்லப்பட்டுள்ளது. காகம் வந்து கத்தி கொண்டே இருப்பதால் பயந்து அந்த காகத்தை இனி துறத்தி விடாதீர்கள்.

- Advertisement -

காகம் வந்து தொடர்ந்து உங்களுடைய வீட்டில் கத்திக்கொண்டே இருந்தால் அதற்கு சாப்பிடுவதற்காக உங்களால் எந்த உணவை வைக்க முடியுமோ அதை வையுங்கள். அந்தக் காகம், அந்த சாதத்தை சாப்பிட்டு மீண்டும் கரைந்தால் அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. இதன்மூலம் வீட்டிற்கு நன்மை தான் நடக்குமே தவிர ஒருபோதும் கெட்ட பலன் இல்லை. சிலபேர் வீட்டுக்கு விருந்தாளி வருவதை சொல்லுகிறது என்று கூட சொல்வார்கள்.

crow feeding

சரி, அடுத்தபடியாக நாம் அவசர அவசரமாக வெளியே செல்லும் போது சில சமயம் அபசகுணம் பிடித்த மாதிரி காகம் வந்து, நம்மேல் எச்சிலை போட்டு விட்டுப் போகும். ‘அழகாக ஆடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு செல்லும் போது, அபசகுனம் பிடித்த காகம் இப்படி பண்ணி விட்டதே!’ என்று நிறைய பேர் காகத்தை திட்டி கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.

Kagam kariaum palan

ஆனால் காகத்தின் எச்சம் நம் மீது பட்ட உடனேயே, அந்த எச்சிலை துடைப்பதற்கு கழுவுவதற்கு நேரத்தை செலவழிப்போம். நாம் செல்லக்கூடிய அந்த நேரம் நமக்கு சிறிது தாமதம் ஆகும். இந்தத் தாமதம் என்பது நமக்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயம் தான். சீக்கிரமே நாம் வெளியே சென்றிருந்தால் ஏதாவது நமக்கு ஆபத்து நேர்ந்து இருக்கலாம். அல்லது நாம் போகக் கூடிய காரியம் நல்லபடியாக முடியாமல் போவதற்கு ஏதேனும் தடைகள் வந்திருக்கலாம்.

crow-poop

அந்த தடைகளை தகர்த்தெறிய தான், நமக்கு வரக்கூடிய ஆபத்தை கெடுதலை தடுப்பதற்காகத் தான், காகம் நம் மீது எச்சிலை போட்டு, நம்மை தாமதப்படுத்தி இருக்கும். காகம் எச்சில் போடுவதன் மூலம் நமக்கு கெடு பலன் ஏற்படாது. உங்களுடைய வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் நடந்து இருந்தால், சற்று பின்னோக்கி சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். நல்லது நினைப்பவர்களுக்கு எப்போதும் நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -