- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமஹாளய அமாவாசை காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

மஹாளய அமாவாசை காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

- Advertisement -

நிறைய பேர் ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம், பித்ரு தோஷம் இருந்தால் அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் படாத கஷ்டங்களை பட வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஒரு சாதாரண சராசரி மனிதனுக்கு கிடைக்க கூடிய சந்தோஷம் கூட, பித்ரு தோஷம் இருக்கும் ஜாதக கட்டக்காரருக்கு கிடைக்காது என்று சொல்லுவார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு இருந்தால் உங்களுடைய குடும்பத்திற்கும் பித்ரு சாபம் இருந்தால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், மஹாளய அமாவாசையில் காகத்திற்கு சாதம் வைக்கும் போது இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். பித்ருக்களின் அருள் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

வழக்கம்போல இன்று அமாவாசை படையலுக்கு சாப்பாடு தடபுடலாக நடக்கும். உங்கள் முன்னோர்களுக்கு படையல் இட்டு அதைக் கொண்டு போய் காகத்திற்கு வைப்பீர்கள் அல்லவா. அதே சாதத்தை காகத்திற்கு வையுங்கள். பூஜைக்காக நீங்கள் நிச்சயம் இன்று வெற்றிலை பாக்கு வாங்குவீர்கள். அந்த வெற்றிலையில் ருந்து சிறிதளவு கிழித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வெற்றிலையை மிகவும் சின்ன சின்ன துண்டுகளாக உங்கள் கையிலே கிழித்து, நீங்கள் காகத்திற்கு வைத்த சாதத்தில் கலந்து விடுங்கள். பிறகு இந்த சாப்பாட்டை கொண்டு போய் காகத்திற்கு வையுங்கள். நீங்கள் ‘கா கா’ என்று அழைத்தவுடன் காகம் வந்து நீங்கள் வைத்த சாதத்தை எடுத்து சாப்பிட்டு விட்டால், உங்களுடைய பித்ருக்களின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

- Advertisement -

இதனால் வரைபட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்று அர்த்தம். ஒரு வேலை காகம் வரவில்லை என்றால் பித்ருக்களுக்கு இன்னும் உங்கள் குடும்பத்தின் மீது ஏதோ ஒரு மன சங்கடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்காக அவர்கள் உங்களை சபிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய அந்த கஷ்டத்தை தணிக்கும் வகையில் ஒரு நிமிடம் கண்களை மூடி பித்ருக்களை நினைத்து, கண்ணீரோடு மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

ஏதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் வைத்த பிரசாத படையலை வந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்து விட்டு மீண்டும் காகத்தை கூப்பிடுங்கள். நிச்சயமாக காகம் வரும். நீங்கள் வைத்த சாப்பாட்டை வந்து சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதம் வைக்கும் போது மறக்காமல் பக்கத்தில் சின்ன கிண்ணத்தில் தண்ணீரும் வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீடு ஃபிளாட்டில் இருக்கிறது காகத்திற்கு சாப்பாடு வைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை இருந்தாலும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும் சிரமம் பாக்காதீங்க காகம் இருக்கக்கூடிய மரம் செடி கொடிகளுக்கு பக்கத்தில் சாப்பாடு கொண்டு போய் வையுங்க. வாய்ப்பே இல்லை என்பவர்கள் உங்களால் முடிந்த உணவுகளை பசு மாட்டிற்கு வாங்கிக் கொடுங்கள். அதுவும் முடியாது என்றால் இயலாதவர் இரண்டு பேருக்கு வயிறார உங்கள் கையால் சாப்பாடு வாங்கி கொடுங்கள். பித்ருக்களின் ஆசி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

அதேபோல காகத்திற்கு மாதத்திற்கு ஒரு நாள் அமாவாசை அன்று மட்டும் சாப்பாடு வைத்தால் வந்து எடுக்காது. தினம் தோறும் காகத்திற்கு சாப்பாடு வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் ஒரே இடத்தில், அந்த சாப்பாட்டை வையுங்கள். நீங்கள் ஒருநாள் உணவு வைக்க மறந்து விட்டால் கூட அந்த காகங்கள் வந்து உங்களை அழைக்கும். அந்த காகங்களே வந்து உங்களிடம் சாப்பாடு கேட்கும். அப்போது நமக்கு ஒரு மன நிறைவு வரும் பாருங்கள்.

ஒட்டுமொத்த முன்னோர்களும் வந்து நம்மை ஆசீர்வாதம் செய்த திருப்தி கிடைக்கும். அனுபவரீதியாக நிறைய பேர் இதை உணர்ந்திருப்பீர்கள். அதை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உங்களுக்கு புரியும். தினமும் காகத்திற்கு சாப்பாடு வையுங்கள். நம்முடைய சாஸ்திரப்படி நம்முடைய முன்னோர்கள் வாக்குப்படி உங்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்