உங்கள் கை ராசியாக மாற இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் போதுமே! அப்புறம் தொட்டதெல்லாம் பொன்னாகும், சொல்லுவதெல்லாம் பலிக்கும்!

hand-root

ஒவ்வொருவருடைய கைராசி, முகராசி என்று கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மையாக பலிக்கும். அவர்கள் முகத்தை பார்த்து விட்டு சென்றாலே அந்த நாள் இனிமையாக மாறிவிடும். இது அவர் அவர்களின் ஜாதக அமைப்பைப் பொறுத்தது என்றாலும் இதிலும் அதிர்ஷ்டம் இருக்க தான் செய்யும். அந்த வகையில் உங்களுடைய கையும் ராசியாக மாற என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

tongue

ஒருவருடைய கை ராசி ஆக வேண்டுமென்றால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். மேலும் இறைவனுடைய அருளும் வேண்டும். சிலருக்கு கருநாக்கு என்று கூறப்படுவதை கேட்டிருப்போம். நாக்கில் கருமை தென்பட்டால் அவர்கள் சொல்லுவது பலிக்கும் என்பது நம்பிக்கை. அது போல முகராசி, ஒருவருடைய முகத்தை பார்த்துவிட்டு வெளியில் செல்லும் பொழுது செல்லும் காரியம் ஜெயமாகும்.

ஒரு வீட்டில் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருந்தால்! நீங்கள் உங்களுடைய தொழிலை பார்க்க செல்லும் பொழுது வீட்டிலிருக்கும் பெண்களான அதாவது அம்மா அல்லது மனைவி, செல்ல மகள் என்று யாருடைய கையிலாவது இருந்து கடை சாவியை எடுத்துச் கொடுக்குமாறு கூறி வாங்கிக் கொண்டு சென்றால் அது ராசியானதாக மாறும்.

money

ஒரு புதிய தொழில் அல்லது ஏதாவது ஒன்றை துவங்க இருக்கிறோம் என்றால் முதன் முதலாக போனி செய்யப்படும் பணம் ராசியானவர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. கிட்டத்தட்ட எல்லோருமே ராசியானவர்கள் தான் என்றாலும் கூட, ஒருசிலர் அதையும் தாண்டி யோகக்காரர்களாக இருப்பார்கள். அது அவர்களுக்குக் கிடைத்த வரம் என்று கூறலாம். அதுபோல நாமும் நம்முடைய ராசியை அதிகரித்துக் கொள்வது எப்படி?

- Advertisement -

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாற, சொல்வதெல்லாம் வேதவாக்காக பலிக்க உங்களிடம் இந்த வேர் இருக்க வேண்டும். பூமியில் படாத விருட்சத்தின் உடைய வேர் தான் அது. குறிப்பாக ஆல், அரசு, வேம்பு ஆகிய 3 மாபெரும் விருட்சங்களின் வேராக இருப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். பூமியில் படாமல் வளரக்கூடிய இந்த மூன்று விருட்சங்களின் வேர்களில் ஏதாவது ஒன்று நம்மிடம் இருந்தால் கூட நாமும் அதிர்ஷ்டக்காரர் ஆக மாறிவிடலாம்.

building-on-tree

ஒரு உபயோகப்படாத பழைய கட்டிடங்களில் பார்த்தால் தெரியும். பூமியில் படாமல் கட்டிடத்தின் மீது இது போன்ற மரங்கள் வளர்ந்து இருக்கும். இவற்றினுடைய வேர்ப்பகுதி ஆனது கட்டிடத்தின் மீது உள்ள மண்ணின் உள்ளே புதைந்து இருக்கும். இது போன்ற விருட்சத்தின் வேரை தெய்வீக அம்சமாக பார்க்கிறார்கள். அதனுடைய வேர்ப்பகுதி அந்த கட்டிடத்தை சுற்றிலும் சூழப்பட்டிருக்கும், இதனை கைபடாமல் பத்திரமாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆல், அரசு, வேம்பு எந்த விருட்சமாக இருந்தாலும் பரவாயில்லை! பூமியில் வேர் இல்லாமல் கட்டிடத்தின் மீது வளர்ந்துள்ள செடிகளின் வேரை கண்டால் விட்டுவிடாதீர்கள். அந்த வேரை கைபடாமல், கத்தி படாமல் எடுக்க வேண்டும் என்பது முக்கிய குறிப்பாகும். இது விருட்ச தோஷ நிவர்த்தியை சரி செய்யும். கூர்மையான கற்கள் கொண்டு வேரை பக்குவமாக தகர்த்து எடுக்கலாம்.

vetti-ver0

நீங்கள் எடுக்கும் இந்த வேரை உங்கள் வீட்டில் பூஜை அறையின் வடக்கு திசையில் ஒரு சிறிய பட்டு துணியில் வைத்து முடிந்து வைத்து விடுங்கள். இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை! ஒருமுறை இப்படி வைத்து விட்டால் போதும். அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது இதனை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு உங்கள் கைராசி ஆக மாற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் பூஜைகளும், உச்சரிக்கும் மந்திரங்களும் இதனுள் கிரகித்துக் கொண்டு உங்களையும் ராசியாளராக மாற்றிவிடும். பிறகு நீங்கள் நினைத்தது நடக்கும், தொட்டதெல்லாம் பலிக்கும்.