உங்கள் உள்ளங்கையில் இந்தக் குறியீடு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன நடக்கும். உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும். என்பதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

kai
- Advertisement -

பொதுவாகவே ஒரு மனிதனின் குண நலன்கள் மற்றும் அவரது எதிர்காலத்தை உள்ளங்கையில் உள்ள ரேகைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது கைரேகை நிபுணர்கள் கூறும் உண்மையாகும். இவ்வாறு ஒருவரின் எதிர்காலத்தை குறிக்கும் உள்ளங்கையில் இருக்கும் ரேகையில் x வடிவ குறியீடு இருந்தால் அவர்களின் வாழ்வும், எதிர்காலமும் எப்படி இருக்கும் என்பதையும், அவர்கள் எவ்விதமான புகழை அடைவார்கள் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கைரேகை பலன்கள்:
ஒருவரின் கை ரேகையை வைத்து பலனை அறிந்து கொள்வதற்கு ஆணாக இருந்தால் வலது கையின் ரேகையைப் பார்த்தும், பெண்ணாக இருந்தால் இடது கையின் ரேகையைப் பார்த்தும் அவர்களுக்கான பலனை கூறமுடியும்.

- Advertisement -

700 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ரேகைகள் இருக்கும். ஒருவர் ரேகை மாதிரி மற்றொருவர் ரேகை இருக்காது. எனவே ஒவ்வொருவருக்கும் அவர்கள் கையில் இருக்கும் ரேகையை பொருத்து வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். இவற்றில் 3 சதவிகிதம் மக்களின் கைகளில் மட்டுமே x வடிவ குறியீடு காணப்படுகிறது. இந்த குறியீடு உள்ளவர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.

X குறியீடு பலன்கள்:
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களின் இரு கைகளிலும் வெவ்வேறு விதமான ரேகைகளே இருக்கும். அதே போல் இந்த x குறியீடும் ஏதேனும் ஒரு கையில்தான் அமையப்பெற்றிருக்கும். இரு கைகளிலும் இவ்வாறு x குறியீடு அமையப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.

- Advertisement -

இந்த x வடிவ குறியீட்டின் பலனை ரஷ்யாவை சேர்ந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று ஆராய்ச்சிகள் பல செய்து இதன் உண்மையை கூறியுள்ளது. ஒருவரின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை இந்த குறியீட்டுக்கு உள்ளது. உலகப் புகழ்பெற்ற தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் கைகளில் நிச்சயம் இவ்வகையான குறியீடு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறது ரஷ்ய பல்கலைக்கழகம்.

அவ்வாறு உலகின் புகழ்பெற்ற மாமன்னன் அலெக்சாண்டர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் போன்றோரின் கைகளில் இவ்வகை குறியீடு இருந்திருக்கிறது. அதேபோல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடி மிர்புதின் இவர்கள் கையிலும் x வடிவ குறியீடு உள்ளது.

ஏதேனும் ஒரு கையில் இந்த குறியீடு உள்ளவர்களே மிகவும் புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்வு மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு ஒரு கையில் இந்த ரேகை உள்ளவர்களே புகழ் பெற்றவர்களாக இருந்தால் இரண்டு கையிலும் இந்த x வடிவம் இருந்தால் அவர்கள் எந்தவிதமான புகழின் உச்சிக்கு செல்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள். இவ்வாறானவர்களின் வளர்ச்சி மற்றும் புகழை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இவர்கள் இறப்பிற்குப் பின்னரும் இவர்களின் பெயரும், புகழும் இந்த உலகில் நிலைத்து கொண்டிருக்கும்.

X வடிவ குறியீடு கொண்டவர்கள் யானையை விடவும் பலமடங்கு ஞாபகசக்தி உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மன்னிக்கும் குணம் இருக்குமே தவிர மறக்கும் குணம் இருக்காது. இயல்பாகவே இவர்களுக்கு இவர்களை சுற்றி நடக்கும் சூழ்நிலையை உணரும் சக்தி இருக்கும். இவர்களை எவராலும் ஏமாற்றமுடியாது. இவர்களுக்கு எதிரான சதி வேலைகளை செய்து இவர்களை தோற்கடிக்க முடியாது. எப்பொழுதும் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை மட்டுமே செய்வார்கள். பிறரின் பேச்சை எப்பொழுதும் சீக்கிரத்தில் நம்பிவிட மாட்டார்கள்.

- Advertisement -