செல்வ சிறப்போடு வாழ செய்யும் கஜகேசரி யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? பார்ப்போம் வாருங்கள்

astrology

ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்த 12 கட்டங்களிலும் உள்ள எந்த ஒரு ராசிக்கும் 1,4,7,10ஆம் கட்டங்கள் அல்லது வீடுகள் ஜோதிட சாத்திரத்தில் கேந்திரம் வீடுகள் எனப்படும். அப்படி ஒரு ராசிக்கு அவரது ஜாதகத்தில் இந்தக் கேந்திர வீடுகளில் குருக் கிரகமும்,சந்திரக் கிரகமும் இருந்தால் அவருக்கு கஜகேசரி யோகம் இருப்பதாகப் பொருள். “கஜம்” என்றால் “யானை”, “கேசரி” என்றால் “சிங்கம்”.யானையைப் போல பலமும் சிங்கத்தைப் போன்ற அஞ்சா நெஞ்சுடையவர்களாகவும் இருப்பர் என்பது இந்தயோகத்தைக் கொண்டவர்களை பற்றிய பொதுவான கணிப்பு.

astrology

ஒரு ஜாதகருக்கு இந்த “கஜகேசரி யோகம்” மட்டும் சிறந்த முறையில் அமைந்திருந்தால், அவருக்கு “அட்சய பாத்திரமே” கிடைத்தார் போன்றது தான். ஏனெனில்,இந்த யோகத்தின் அமைப்புப் படி சந்திர பகவான் இவர் உண்ணும் உணவுக்கான உத்திரவாதத்தை அளிக்கிறார். குரு பகவானோ இவரை எந்த விதமான கஷ்ட நஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றிக்கொண்டே இருப்பார். இந்த கஜகேசரி யோகத்தினால் ஒரு ஜாதகர் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ்,நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை ஏற்படும்.

மேலும் இந்த ஜாதகருக்கு எதிரிகளால் எவ்விதமான தீங்குகளும் செய்ய முடியாது. சில சமையம் தீமை செய்ய முயல்கின்ற எதிரிகளால் இவருக்கு லாபமேற்படும் சூழ்நிலையும் உருவாகும். இக்காலத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் தன் தனிப்பட்ட திறனால் தீர்த்துக் கொள்வார். சிறந்த இடத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்கும். இந்த யோகக் காலக்கட்டத்தில் இவர்களுக்கு பெண்களாலும் தன வரவு இருக்கும். காரணம் சந்திர பகவான் பெண் தன்மைக் கொண்டவர் என்பதால். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் உண்டாகும்.

astrology

ஆனால் இந்த கஜகேசரி யோகம் எல்லாருக்கும் இப்படிப்பட்ட நன்மைகளைச் செய்யுமா? என்றால் இல்லை என்பது தான் பதில்.காரணம் சந்திரனும், குருவும் இந்தக் கேந்திர ராசிகளில் இருப்பதால் மட்டும், மற்றக் கிரகங்களின் தாக்கம் ஜாதகருக்கு இருக்காது என்று அர்த்தமல்ல. இது போன்ற எண்ணற்றத் தடைகளைக் கடந்து அணைத்து கிரக நிலைகளும் ஜாதகத்தில் சரியாக அமைய பெற்றால் மட்டுமே இந்த கஜகேசரி யோகம் முழுமையான பலன்களை கொடுக்கும்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
வக்ரத்தில் குரு – 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்

English Overview:
Here we have detailed description about Gajakesari yoga and its benefits in Tamil language. We descripted about how to find this Yoga in astrology too.