காக்கை சிறகினிலே நந்தலாலா – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

இதையும் படிக்கலாமே:
எத்தனை கோடி இன்பம் – பாரதியார் கவிதை

அற்புதமான இந்த கவிதையை பல இசையமைப்பாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மெட்டு போட்டு அதை பாடல் ஆக்கினார். அதில் குறிப்பிடும்படி கூறவேண்டுமான 1981ஆம் ஆண்டு, ரகுவரன் நடிப்பில் வெளிவந்த ” ஏழாவது மனிதன்” என்ற திரைப்படத்தில் இந்த கவிதை, பாடல் ஆக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் தான் மேலே இணைக்கப்பட்டுளளது.

English Overview:
Here we have “Kakkai Siraginiley lyrics in Tamil” Bharathiyaar kavithai in Tamil. This kavithai was composed as the song in Ezhavadhu Manithan movie.