உங்கள் வீட்டையும், உங்களையும் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் விலகி தொழில், வியாபாரம் செழிக்க செவ்வாய் கிழமையில் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா?

lemon-diya-kaali
- Advertisement -

அம்மன் அவதாரங்களில் மிகவும் முக்கியமாக உக்கிர தெய்வமாக விளங்கும் காளியம்மன் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவளிடம் பக்தி சிரத்தையுடன், நேர்மையுடன் எதை நாம் வேண்டி கேட்டாலும் உடனே அதனை வரமாக தந்து விடுவாள். அந்த வகையில் அம்மனுக்கு உகந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சன்னிதியில் இப்படி வழிபட்டால் வருமான தடை நீங்கி தொழில், வியாபாரம் போன்றவை நல்ல முன்னேற்றம் அடையும். அவளை வேண்டி, வணங்கி சொல்ல வேண்டிய 108 போற்றிகள் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதைப் பற்றிய தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kaali

காளி அம்மன் 108 போற்றிகள்:
ஓம் காளியே போற்றி!
ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி!
ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி!

- Advertisement -

ஓம் அகநாசினியே போற்றி!
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி!
ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி!
ஓம் ஆதாரசக்தியே போற்றி!
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி!

Goddess Kali

ஓம் இளங்காளியே போற்றி!
ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி!
ஓம் இஷ்டதேவதையே போற்றி!
ஓம் இடர் களைபவளே போற்றி!
ஓம் ஈறிலாளே போற்றி!

- Advertisement -

ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி!
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி!
ஓம் உக்ரகாளியே போற்றி!
ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி!
ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி!

kaliamman

ஓம் ஊழிசக்தியே போற்றி!
ஓம் எழுதலைக்காளியே போற்றி!
ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி!
ஓம் ஓங்காரியே போற்றி!
ஓம் கருங்காளியே போற்றி!

- Advertisement -

ஓம் காருண்யதேவியே போற்றி!
ஓம் கபாலதாரியே போற்றி!
ஓம் கல்யாணியே போற்றி!
ஓம் காக்கும் அன்னையே போற்றி!
ஓம் காளராத்ரியே போற்றி!

kaliamman

ஓம் காலபத்னியே போற்றி!
ஓம் குங்குமகாளியே போற்றி!
ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி!
ஓம் சமரில் வெல்பவளே போற்றி!
ஓம் சத்திய தேவதையே போற்றி!

ஓம் சம்ஹார காளியே போற்றி!
ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி!
ஓம் சிம்ம வாகினியே போற்றி!
ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி!
ஓம் சிவசக்தியே போற்றி!

kaliamman

ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி!
ஓம் சுடலைக்காளியே போற்றி!
ஓம் சுந்தர மாகாளியே போற்றி!
ஓம் சூலம் கொண்டவளே போற்றி!
ஓம் செங்காளியே போற்றி!

ஓம் செல்வம் தருபவளே போற்றி!
ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி!
ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி!
ஓம் சோமகாளியே போற்றி!
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி!

Rajakali Amman

ஓம் தனகாளியே போற்றி!
ஓம் தட்சிணகாளியே போற்றி!
ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி!
ஓம் தாண்டவமாடினாய் போற்றி!
ஓம் தாருகனை அழித்தாய் போற்றி!

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
ஓம் தில்லைக்காளியே போற்றி!
ஓம் தீமையை அழிப்பாய் போற்றி!
ஓம் தீயவர் பகைவியே போற்றி!
ஓம் நல்லவர் துணைவியே போற்றி!

MathuraKaliamman

ஓம் நலன்கள் தருவாய் போற்றி!
ஓம் நவக்கிரக நாயகியே போற்றி!
ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி!
ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி!
ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி!

ஓம் நாடாளும் தேவியே போற்றி!
ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி!
ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி!
ஓம் நித்தியகாளியே போற்றி!
ஓம் நிக்ரஹ காளியே போற்றி!

MathuraKaliamman

ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி!
ஓம் பராசக்தி தாயே போற்றி!
ஓம் பஞ்சகாளியே போற்றி!
ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் பயங்கரவடிவே போற்றி!

ஓம் பத்ரகாளியே போற்றி!
ஓம் பாதாளகாளியே போற்றி!
ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி!
ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி!
ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி!

MathuraKaliamman

ஓம் பூதகாளியே போற்றி!
ஓம் பூவாடைக்காரியே போற்றி!
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி!
ஓம் பெருங்கண்ணியே போற்றி!
ஓம் பேராற்றலே போற்றி!

ஓம் பொன்வளம் தருவாய் போற்றி!
ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி!
ஓம் மதுரகாளியே போற்றி!
ஓம் மடப்புரத்தாளே போற்றி!
ஓம் மகாகாளியே போற்றி!

kaali-amman

ஓம் மகாமாயையே போற்றி!
ஓம் மங்களரூபியே போற்றி!
ஓம் மந்திரத்தாயே போற்றி!
ஓம் மருந்தாய் வருவாய் போற்றி!
ஓம் மாற்றம் தருவாய் போற்றி!

ஓம் முக்கண்ணியே போற்றி!
ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி!
ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி!
ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் மோட்சம் தருவாய் போற்றி!

kaali-amman1

ஓம் வளம் தரும் தேவியே போற்றி!
ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி!
ஓம் விரிசடையாளே போற்றி!
ஓம் விண்ணகத்தலைவியே போற்றி!
ஓம் வீரபத்ரகாளியே போற்றி!

ஓம் வீணரை அழிப்பாய் போற்றி!
ஓம் வெக்காளியே போற்றி!
ஓம் வேதனை களைவாய் போற்றி!
ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி போற்றி! போற்றி!

seivinai

பொதுவாக செய்வினை கோளாறுகள், பில்லி, சூனியம் போன்ற கட்டுகள் விலக காளி அம்மனை வழிபடுவது வழக்கம். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறி லட்சுமி கடாட்சம் உண்டாகவும் நாம் உக்கிர தெய்வமாக இருக்கும் காளியம்மனை கட்டாயம் வழிபடுவது சிறப்பு. உக்ர தெய்வங்கள் பெரும்பாலும் தீமை செய்பவர்களை மட்டுமே உக்கிரத்துடன் அழிக்கும். எனவே மற்ற அனைத்து பக்தர்களுக்கும் காளி அம்மன் சாதாரண அம்மனைப் போல ஒரு தாயாகவே நம்முடனேயே இருந்து நம்மை காத்தருள்வாள்.

kaali-amman2

தீய சக்திகளுடைய கட்டுகள் அகல, தொழில், வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலை நீங்க அதீத சக்தி வாய்ந்த இந்த காளி அம்மன் உடைய 108 போற்றிகள் தினமும் அதிகாலையில் மற்றும் மாலை வேளையில் ஜபிப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காளியம்மன் சன்னிதிக்கு சென்று எலுமிச்சையை பிழிந்து விட்டு எலுமிச்சை மூடியில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றுவது போல ஏற்றி வழிபட்டு வந்தால் மறைமுக எதிரிகள் தொல்லை ஒழியும். உடலில் இருக்கும் கெட்ட அதிர்வுகள் அத்தனையும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எல்லா வகையான நன்மைகளையும் நாம் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். ஓம் காளி ஜெய் காளி போற்றி! போற்றி!

- Advertisement -