நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் மந்திரம்

kaali-compressed
- Advertisement -

காலனின் மனைவியான காளி தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் உக்கிர தெய்வமாகவும் அறியப்படுகிறாள். காளியை எவர் ஒருவர் முழு மனதோடு பூஜித்தாலும் அவர்களுக்கு பர் பல அறிய சக்திகளை காளி தேவி வழங்குவாள் என்று பல நூல்கள் குறிப்பிடுகின்றன. மண்டை ஓட்டினை அணிந்து பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருந்தாலும் காளியின் உள்ளம் கருணை நிறைந்தது. அவளை பூஜித்து கீழே உள்ள மூல மந்திரம் அதை முறையாக ஜபித்தால் வருங்காலத்தில் நடக்கப்போவதை உணரும் சக்தியை கூட நம்மை பெற இயலும் என்று நம்பப்படுகிறது. இதோ அந்த மந்திரம்.

Rajakali Amman

காளி மூல மந்திரம்:

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

- Advertisement -

இந்த மந்திரத்தை முறையான குருவிடம் பயின்று, சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு வருங்காலத்தில் நடக்க விருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் முன்கூட்டியே அறியும் திறன் அதிகரிக்கும். மேலும் இந்த மந்திர சக்தியின் பலத்தால் வீட்டில் எந்த வித தீய சக்திகளும் ஆண்ட முடியாது. இதை ஜெபிப்போர்க்கு ஞானம் பெருகும், செல்வ நிலை உயரும், எதையும் சாதிக்கும் தைரியமும் மனதில் ஒரு தெளிவும் பிறக்கும்.

mariyamman

காளி வழிபாடு

- Advertisement -

மகா சக்தியாக விளங்கும் காளி தேவியை வழிபடும் வரம் அனைவருக்குமே கிடைத்துவிடாது. முன்னோர்கள் செய்த புண்ணிய பலன்கள் மற்றும் ஒரு நபரின் முன்ஜென்ம கர்ம வினைகளின் நன்மையான பலன்கள் காரணமாகவே சர்வ சக்தியான காளி தேவியை உபாசிக்கும் அற்புத வாய்ப்பு ஏற்படும். எத்தகைய தீய சக்திகளும் சர்வ நிச்சயமாக ஒழித்து கட்டும் ஆற்றல் வாய்ந்த காளி தேவியை வழிபட உடல், மனம், ஆன்ம சுத்தி இருக்க வேண்டியது அவசியம். உக்கிர தெய்வமாக காளியம்மன் இருப்பதால் இல்லறத்தில் இருப்பவர்கள் தேவியின் உக்கிரமான தோற்றம் கொண்ட படத்தையோ அல்லது சிலையை வைத்து வழிபடுவது சில சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும். ஆயினும் காளிதேவியை மனதிற்குள்ளாக வைத்து வழிபடுவதால் எந்த ஒரு பாதகமும் இல்லை.

MathuraKaliamman

அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரந்தோறும் வருகின்ற செவ்வாய்க்கிழமை காளிதேவியை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் ராகு கால நேரத்தில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற எத்தகைய பிரச்சினைகளும் சுலபத்தில் கூர்ந்து நிம்மதி பெறலாம். பொதுவாக ஆடி மாதம் என்பதே அம்மன் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த காலமாக இருக்கிறது. அந்த மாதம் முழுவதும் காளிதேவிக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி, இன்பங்கள் பெருகும்.

- Advertisement -

amman

காளி வழிபாடு பலன்

மனிதர்கள் நம் அனைவருக்குமே இந்த வாழ்வும், இந்த வாழ்வை நாம் வாழும் இந்த பூமியை உள்ளடக்கிய இப்பிரபஞ்சமும், ஒவ்வொரு தினமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நமக்கு பல அதிசயங்களை காட்டுகிறது. அதே நேரத்தில் பல புதிய விடயங்களை கற்று தருகின்றது. சாமானிய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு தான் இவை எல்லாம் ஆச்சர்யங்கள். தங்களின் தீவிர தவத்தால் இவை எல்லாவற்றிற்கும் விடைகளை தெரிந்து கொண்ட ரிஷிகளுக்கும், ஞானிகளுக்கு இவை அனைத்தும் அந்த இறைவனின் திருவிளையாடல்கள்.

Amman

இந்த உலகத்தில் உயிருள்ளவற்றில் அனைத்திலுமே ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் உண்டு. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. அது போலவே இயற்கையின் நீதியான பிறப்பும், இறப்பும் ஒன்று மற்றொன்றை ஈடுசெய்கிறது. அதில் இந்த இறப்பை வழங்குவது காலம் ஆகும். இந்த காலம் தான் காளி என்ற பெண் தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த காளி தேவியை வணங்குவதால் அவருக்கு எதன் மீதும் இருக்கும் பயம் விலகும், மேலும் வழிபடுபவர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் இந்த காளி வழிபாடு.
இதையும் படிக்கலாமே:
பழனி முருகன் சிலையை உருவாக்கிய போகர் மூல மந்திரம்

English Overview:
Kali amman moola manthiram is for Goddess Kali. If one chant this mantra regularly he will get blessings from Goddess Kali. With that one can predict future.

- Advertisement -