நினைத்தது உடனே நிறைவேற, கோடி நன்மைகள் பெற காமதேனு வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.

kaamathenu2

கடன் வாங்காமல் வாழ்க்கையின் சக்கரமே ஓடாது என்ற நிலையில் தான் இன்று பலரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டம் எப்போது ஓயுமோ? என்ற பயமே! மனிதனின் ஆயுளை குறைத்து விடுகிறது என்பது அதிர்ச்சி தரும் சர்வே ரிப்போர்டாக இருக்கிறது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்? ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்? என்று தெரியாமலே எதிர்கால நன்மைகள் என்று கூறிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படியே சென்று கொண்டிருந்தால், எப்போது தான் நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம்? என்பது கேள்விக்குறி தான். அதற்காக இந்த ஓட்டத்தை நிறுத்தவும் முடியாது என்பதே வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த காமதேனு வழிபாடு சிறந்த தீர்வு தரும். காமதேனு வழிபாட்டையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இப்பதிவில் இனி காணலாம்.

kaamathenu

காமதேனு படமோ அல்லது விக்ரஹமோ வங்கி வைத்து கொள்ளுங்கள். காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனு வழிபட்டால் உங்களது வீடு சுபீட்சம் பெறும். மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்படும். பூஜை அறையில் சில விஷயங்களை வைத்து வழிபடுவதால் உங்களுடைய வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறக் கூடிய வரம் கிட்டும். அவ்வகையில் காமதேனு விக்ரஹம் வைத்து வழிபடுவதால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். பூஜை அறையில் காமதேனு விக்ரஹம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். விக்ரஹம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து பூஜை செய்யலாம்.

காமதேனு விக்ரஹம் கன்றுடன் கூடியதாக கட்டாயம் இருக்க வேண்டும். விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினமும் காமதேனுவை வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்கள். காமதேனு விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அந்த விக்ரஹத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் பாலாபிஷேகம் செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக நீங்கிவிடும்.

kaamathenu1

காமதேனு விக்ரஹத்தின் கொம்பு பகுதியில், நெற்றிப் பகுதியில், கால்களில், மடியில் என மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பசுவின் கன்றிற்கும் இது போல் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும். பின்னர் உங்களின் இரு கரங்களாலும் காமதேனுவை தொட்டபடி, உங்களுக்கு இருக்கும் குறைகளை, கோரிக்கைகளை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி கொண்டபின் அப்படியே கைகளை எடுக்காமல், கீழே உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

காமதேனு மந்திரம்:
ஓம் சுபகாயை வித்மஹே!
காமதாத்திரியை,
சதீமஹி தந்னோ தேனு
ப்ரசோதயத்.

om manthiram

இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். பசுவை தெய்வமாக நினைத்து போற்றுபவர்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் வாழ்வில் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களையும் போக்கி விடும். கர்ம பலன்கள் குறைய தொடர்ந்து பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீட்டை சுற்றி தெளித்து வர எந்த கெட்ட சக்தியும் உங்களது குடும்பத்தையே நெருங்கவிடாமல் செய்யும். நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது. நீங்கள் அறிந்திடாத ஒரு ரகசியக் குறிப்பு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kamadhenu worship benefits. Kamadhenu in Tamil. Kamadhenu pooja in Tamil. Kamadhenu pooja at Home. Kamadhenu pooja. Kamadhenu valipadu in Tamil.