வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது தெரியாமல் கூட இவ்வாறான தவறுகளை ஒரு போதும் செய்து விடாதீர்கள்.

kamatchi-amman-vilakku
- Advertisement -

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் நிச்சயம் காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும். இதனை காலை மாலை இரு வேளைகளில் ஏற்றி வர லட்சுமி கடாட்சம் வீட்டில் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். பூஜைப் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காமாட்சியம்மன் விளக்காகும். திருமணமாகி புதுப்பெண் மணமகன் வீட்டிற்கு செல்லும் பொழுதும் காமாட்சி அம்மன் விளக்கினை கையில் ஏந்திக் கொண்டு தான் வீட்டிற்குள் வரச் சொல்வார்கள். அவ்வாறு பலவித சிறப்புகள் வாய்ந்த காமாட்சி அம்மன் விளக்கினை ஏற்றும் பொழுது என்ன தவறுகள் செய்ய கூடாது என்பதனையும், மகாலட்சுமியின் முழு அருளையு எவ்வாறு பெறுவது என்பதனை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kamakshi vilakku

உலக மக்களின் நன்மைக்காகவும், உலகத்தினை அழிவின் பாதையில் இருந்து மீட்டு வருவதற்காகவும் தவம் புரிந்தவர் காமாட்சியம்மன். அந்த சமயத்தில் காமாட்சி அம்மனுடன் சேர்ந்து மற்ற அனைத்து தெய்வங்களும் அவருடன் ஐக்கியமானார்கள். எனவே காமாட்சி அம்மன் ஒருவரை மட்டும் வணங்கினால் போதும் மற்ற அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைத்துவிடும். இந்த ஒரு முக்கிய காரணத்திற்காக தான் நமது வீடுகளில் காமாட்சி அம்மன் விளக்கினை ஏற்றி பூஜை செய்து வரும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு காமாட்சி அம்மன் விளக்கினை வீட்டில் ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் முழுவதுமாக கிடைக்கப் பெறும்.

- Advertisement -

காமாட்சியம்மன் விளக்கினை ஒரு தாம்பூல தட்டின் மீது வைத்து தான் தீபம் ஏற்றவேண்டும். அந்தத் தட்டு காமாட்சி அம்மன் விளக்கின் அடிப்பாகத்தை விட சற்று அகலமாக இருக்க வேண்டும். அந்த தட்டின் மீது காமாட்சி அம்மன் விளக்கு நன்றாக படியுமாறு இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் விளக்கு ஆட்டம் கொள்ளுமாறு வைத்து விடக்கூடாது.

kamatchi-amman-vilaku

காமாட்சி அம்மன் விளக்கில் சுடர்விடும் இடத்திற்கு அருகில் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து அவற்றை கருக விட கூடாது. மங்கல பொருட்கள் இவ்வாறு தீயில் கருதுவது வீட்டிற்கு நன்மையை தராது. எனவே சுடர் எரியும் விளிம்பிற்கு சற்று தொலைவில் மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கினை தினமும் ஏற்றும் பொழுது அதில் உள்ள பழைய திரியை மாற்றி புது திரிபோட்டு அதன் பின்னரே விளக்கினை ஏற்ற வேண்டும். எப்பொழுதும் பழைய திரியினை அப்படியே வைத்து தீபம் ஏற்றி விடக்கூடாது.

kamatchi-vilakku

காமாட்சி அம்மன் விளக்கிற்க்கு பொட்டு வைக்கும் பொழுது முன் பக்கத்தில் இருக்கும் அம்மனுக்கு பொட்டு வைத்து விட்டு, பிறகு பின்புறம் இருக்கும் அம்மனுக்கும் நிச்சயம் ஒரு பொட்டு வைக்க வேண்டும். இந்தப் பொட்டு எப்பொழுதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். காமாட்சி அம்மன் அருகில் இருக்கும் யானை முகத்திற்கும் நிச்சயம் மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

kamatchi-vilakku3

காமாட்சி அம்மன் விளக்கில் ஏற்றப்படும் தீபம் எப்பொழுதும் சிறிய ஒளியுடன் இருக்க வேண்டும். பந்தம் போன்று பெரிதாக எரிந்து கொண்டும் அல்லது தீபச்சுடர் அலைமோதிக் கொண்டும் இருக்கக் கூடாது. அதேபோல் காமாட்சி அம்மன் விளக்கிற்கு வைக்கப்படும் மலர்கள் தீபச்சுடரில் எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

sivan-vilakku

இங்கு குறிப்பிட்டுள்ள சிறிய தவறுகளை இனி தெரியாமல் கூட உங்கள் வீடுகளில் செய்துவிடாதீர்கள். காமாட்சி அம்மன் விளக்கினை முறையாக பயன்படுத்தி, தினமும் தொடர்ந்து தீபம் ஏற்றி மகாலட்சுமியின் அருளை முழுவதுமாக பெற வேண்டுமென மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்கின்றோம்.

- Advertisement -