கண் திருஷ்டியை அகற்றி எதிரிகளையும் வசப்படுத்தும் அற்புத காய். இதனை வீட்டின் வாசலில் வைத்து விட்டால் எதிரிகளின் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்

kan
- Advertisement -

ஒருவர் மீது அல்லது ஒரு குடும்பத்தின் மீது பலவித சந்தர்ப்பங்களில் கண் திருஷ்டிகள் உருவாகின்றன. ஒரு வீட்டில் திருமணம் நடந்து முடிந்து விட்டால் அதனை தொடர்ந்து பல கஷ்டங்கள் உண்டாகும். இதற்கு காரணம் அந்தத் திருமணத்தின் போது பலரது கண் பார்வையும் அந்த குடும்பத்தின் மீது விழுந்ததால் தான். அவ்வாறு வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுபகாரியங்களுக்கு பிறகும் அந்த வீட்டில் கண் திருஷ்யினால் பலவித பிரச்சனைகள் உண்டாகின்றன. இவ்வாறான கண் திருஷ்டிகள் நம்மை விட்டு விலகி எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பிக்க இந்த ஒரு காயை வைத்து என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fear-pei-kanavu

பூசணிக்காய் மகத்துவம்:
பூசணிக்காய்க்கு தடி காய், கல்யாண பூசணிக்காய் என்னும் மற்ற பெயர்களும் இருக்கின்றன. இவ்வாறு கல்யாணப் பூசணிக்காய் என்று இதனை சொல்வதற்கு ஒரு உள்ளார்ந்த அர்த்தமும் இருக்கிறது.

- Advertisement -

ஒரு திருமணத்திற்கு நம்மை சுற்றியுள்ள அனைத்து சொந்த பந்தங்களும், அக்கம் பக்கத்தினரும், நண்பர்களும், அதில் சில எதிரிகளும் இவ்வாறு பலவிதமான நபர்கள் வருவார்கள். இவர்களின் பொறாமை பார்வை நம் குடும்பத்தின் மீது விழுந்து அவர்களின் வாயிலிருந்து நம் குடும்பத்தை பார்த்து அட இது என்ன இவ்வளவு பிரம்மாண்டமாக செய்கிறார்களே! இவர்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்களே! என்றெல்லாம் வார்த்தைகள் வந்து விட்டால் அவை நமக்கு ஒரு கண் திருஷ்டியாக மாறிவிடுகிறது.

marriage

இவ்வாறான கண் திருஷ்டிகளில் நம் குடும்பம் மாட்டிக்கொண்டு துன்பப்படாமல் இருப்பதற்காகத்தான் கல்யாணத்தில் வைக்கப்படும் சாம்பாரில் இந்த பூசணிக்காய் சேர்க்கப்படுகிறது. இந்த பூசணிக்காய் சேர்த்த சாம்பாரை சாதத்துடன் சேர்த்து மற்றவர்கள் உண்ணும் பொழுது அவர்களின் பொறாமை எண்ணம் அழிந்து அவர்களின் வார்த்தையின் பலன் நம்மை பாதிக்காமல் இருக்கிறது. இதற்காகவே அனைத்து கல்யாணத்தின் பொழுதும் சாம்பாரில் இந்த பூசணிக்காய் சேர்க்கப்படுகிறது.

- Advertisement -

அவ்வாறு நமது முன்னோர்கள் பூசணிக்காயை வைத்து கண் திருஷ்டிகாக பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலமிட்டு, அந்த கோலத்தின் நடுவே சிறிதளவு மாட்டு சாணியை வைத்து, அதன்மீது பூசணிப் பூவை வைத்து அலங்கரிப்பார்கள். இவ்வாறு செய்வது கோலத்தை அலங்கரிப்பதற்காக மட்டுமல்ல. நமது வீடு தேடி வரும் தேவதைகளை வரவேற்பதற்காகவும் தான். இவ்வாறு வீட்டிற்கு முன் வரும் தேவதைகள் இந்த பூசணிப் பூவைப் பார்த்ததும் அவர்களின் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதித்து விட்டு செல்வார்களாம்.

pumpkin

இதுபோல் பூசணிக்காயை திருஷ்டி சுற்றி போடுவதற்கும் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டில் கண் திருஷ்டி இருப்பது தெரிந்து விட்டால் பூசணிக்காயை சுற்றி நடுரோட்டில் உடைத்து விடாமல் அதனை மண் தோண்டி புதைத்து விட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களை விட்டு கண் திருஷ்டி அகன்று ஓடும்.

kan-thirusti

இவ்வாறு செய்வதற்கு முதலில் பூசணிக்காயை வாங்கி வந்து அதன் மீது ஒரு இரும்பு ஆணியை அடித்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்து 15 நாட்கள் அந்த பூசணிக்காயை வீட்டின் வாசலில் வைத்து விட வேண்டும்.பின் 15 நாட்களுக்குப் பிறகு இந்தக் பூசணிகாயை குழி தோண்டி புதைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிரிகளின் தீய பார்வையும் அதனால் உண்டாகும் கண் திருஷ்டியும் நம்மை பாதிக்காமல் இருக்கும்.

- Advertisement -