ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எந்த ஒரு நல்ல செயல் நடந்தாலும் தீய செயல் நடந்தாலும் அதனால் கண் திருஷ்டி என்பது ஏற்படும். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்று அன்றைய காலத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அது முழுக்க முழுக்க உண்மையான வார்த்தைகளே. நாம் நன்றாக இருந்தாலும் நம்மை பற்றி பேசுவார்கள். நாம் தாழ்ந்து போனாலும் நம்மை பற்றி பேசுவார்கள். இப்படி நம்மைப் பற்றி பிறர் பேசினாலேயே நமக்கு கண் திருஷ்டி என்பது ஏற்படும். அப்படிப்பட்ட கண் திருஷ்டியை நீக்குவதற்கு வெண்கடுகை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தொழில் நன்றாக நடந்தாலும் கண் திருஷ்டி ஏற்படும், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடந்தாலும் கண் திருஷ்டி ஏற்படும், புதிதாக ஒரு புடவை கட்டினாலும் கண் திருஷ்டி ஏற்படும், புதிதாக ஒரு நகையை வாங்கி போட்டுக் கொண்டாலும் கண் திருஷ்டி ஏற்படும், குடும்பத்துடன் சந்தோஷமாக வெளியில் சென்று விட்டு வந்தாலும் கண் திருஷ்டி ஏற்படும். இப்படி பல வகைகளில் நமக்கு கண் திருஷ்டி என்பது ஏற்படும்.
இந்த கண் திருஷ்டி மிகவும் மோசமான ஒன்று என்பதால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அமர வைத்து சுற்றி போடும் வழக்கம் வைத்திருந்தார்கள். இன்றைய காலத்தில் அவை அனைத்தையும் நாம் மறந்து விட்டோம். அதனால் தான் கண் திருஷ்டியால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எளிதாக செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி ஏற்பட்டு திடீரென்று தொழில் சரிவடைந்து விட்டது என்பவர்களும், தொழிலில் பிரச்சனைக்கு மேல் பிரச்சினைகள், ஒன்றும் இல்லாத பிரச்சனைகள் ஆக வருகிறது என்பவர்களும், அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் இரண்டு சிறிய தட்டை வைத்து அதில் சிறிதளவு வெண்கடுகை போட்டு அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் தொழில் செய்யும் இடத்திற்கு வரும் அனைவரும் பார்க்கும்படி இருக்க வேண்டும். காலையில் மாலையிலும் தினமும் ஏற்றலாம். இயலாதவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது ஏற்றுவதன் மூலம் அவர்களின் தொழிலில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.
வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு படுக்கச் செல்வதற்கு முன் வீட்டில் இருக்கும் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து அந்த குடும்பத் தலைவி அவர்களுடைய கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே அதாவது தலை வாசலுக்கு வெளியே வந்து தன்னைத்தானே மூன்று முறை வலது புறமாகவும் இட புறமாகவும் சுற்றி அந்த வெண்கடுகை தூக்கி எறிந்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் நம்மை பிடித்து இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் என்பது விலகும்.
இதோடு மாலை நேரத்தில் வீட்டை பெருக்கி முடித்த பிறகு வீட்டிற்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு வாசல் கதவின் இரண்டு புறங்களிலும் சிறிது கற்பூரம் சிறிது வெண்கடுகு என்று போட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் பெருக்கும் பொழுது இவை அனைத்தையும் எடுத்து போட்டு விடலாம். இப்படி செய்வதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.
இதோடு மட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒருமுறையாவது வீடு முழுவதும் மூலை முடுக்குகள் அனைத்திலும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். அப்படி சாம்பிராணி தூபம் காட்டும் பொழுது வெட்டிவேர், குங்கிலியம், வெண்கடுக்கு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து காட்ட வேண்டும். இப்படி காட்டுவதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே ஆரோக்கியம் பெற இன்று சிவன் வழிபாடு
மிகவும் எளிமையான தாந்திரீக பரிகாரங்களாக திகழக்கூடிய இந்த பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு வெண்கடுகால் கண் திருஷ்டிகள் முற்றிலும் நீங்கும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.