வீட்டிற்கு வருபவர்களின் பொறாமை கண், கெட்ட அதிர்வுகள் உங்களை பாதிக்காமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!

நம் வீட்டிற்கு வருபவர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லது கெட்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய எண்ண அலைகள் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லவா? ஒரு சிலர் நம்மை பார்த்து பொறாமை எண்ணத்துடன் மனதில் கெட்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்கள். இவர்களைப் போல் நம்மால் எதையும் வாங்க முடியவில்லையே! இவர்கள் மட்டும் எப்படி இப்படி வசதியாக இருக்கிறார்கள்? இது போன்ற எண்ணங்கள் உருவாவது இயல்பான ஒரு விஷயம் தான். அதை தவறு என்றும் சொல்லி விட முடியாது.

kan-thirusti-vinayagar

ஆனால் அதன் பாதிப்பு திருஷ்டியாக நம் வீட்டை தாக்கும் என்பது உண்மை. அதை தடுப்பதற்கு இதை மட்டும் செய்து விட்டால் போதும். அப்படி நாம் எதை செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கண்திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட சக்திகள் நம் கண்களுக்கு நேரடியாக தென்படாத விஷயமாக இருக்கும். இவையெல்லாம் உண்மையா? பொய்யா? என்பதை ஆராய்வதை விட நம் குடும்பத்திற்கு எது பாதுகாப்பானது? என்பதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இறை வழிபாடு செய்தால் அதுவே போதும்.

Lalithambikai

வீட்டில் கெட்ட அதிர்வுகள், கெட்ட சக்திகள் நுழையாமல் இருக்க எப்போதும் காலை வேளையில் மற்றும் மாலை வேளையில் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆதித்திய ஹிருதயம் போன்றவை மிக மெல்லிதாக எப்போதும் ஒலிக்க விட்டு உங்கள் அன்றாட வேலைகளை நீங்கள் பார்த்துக் கொண்டு இருங்கள். இது போல் செய்வதால் எந்த விதமான கெட்ட விஷயங்களும், நமக்கே தெரியாமல் நம்மை தீய சிந்தனைகளுக்கு ஆட்பட வைக்கும் சக்திகளும் விலகி ஓடி விடும் என்பதி ஐதீகம்.

- Advertisement -

பெரிதாக நாம் எந்த பரிகாரத்தையும் மெனக்கெட்டு செய்ய முடியாத சூழ்நிலையில் இது போன்ற சிறு சிறு விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் மிகப் பெரிய பலன்களை அடைய முடியும். இறை வழிபாடு, இறை சிந்தனை எப்பொழுதும், எந்த நேரத்திலும் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மை அறியாமல் நாம் எந்த தவறு செய்ய முனைந்தாலும் அதை செய்ய விடாமல் நம்மை நேர் வழியில் கொண்டு செல்லக் கூடிய ஒரு சக்தி கவசம் நம்மை சுற்றி நாம் அறியாமல் எழும்.

water

அது போல நம் வீட்டிற்கு வருபவர்களின் மனநிலை எப்படியானது? என்பது நமக்கு தெரியாது. அத்தகைய மனநிலை நம்மையும் நம் வீட்டையும் பாதிக்காமல் இருப்பதற்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு கட்டாயம் தண்ணீர் அருந்த தர வேண்டும். இது போன்ற காரணத்தினால் தான் நம் முன்னோர்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் அருந்த கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அவர்களுக்கு தேநீர், காபி போன்றவற்றை தரவில்லை என்றாலும் பரவாயில்லை.

water drink

ஆனால் கட்டாயம் ஒரு டம்ளர் தண்ணீர் நீங்கள் அருந்த கொடுத்தால், நம் வீட்டிற்கு நல்லது. இது ஒரு சூட்சும பரிகாரம் தான். நம் வீட்டில் தண்ணீர் அருந்தியவர்களின் எந்த விதமான கெட்ட மனநிலையும் நம்மை பாதிக்காது என்பது சூத்திரம். சிலர் வேண்டாம் என்பார்கள், விட்டு விடாதீர்கள்! வீட்டிற்கு யார் வந்தாலும் ஒரு டம்ளர் தண்ணீரை இனிமேல் குடிக்க வைத்து விட்டு வழி அனுப்புவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதுவே நம் தமிழர் பாரம்பரிய பண்பாடும்! பின் நம் இல்லம் காக்கும் பரிகாரமும் என்பதை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு இதை செய்தால் உங்கள் துன்பங்கள் எல்லாம் தூள்தூளாகி விடும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.