கண் திருஷ்டியால் உங்கள் வீட்டில் எந்த கசப்பான சம்பவமும் நடக்காமல் இருக்க, இந்த எண்ணெயை எப்போதும் தீராமல் வைத்துக் கொள்ளுங்கள்.

amman2
- Advertisement -

வாழ்க்கையில் நாம் முன்னேறும் போது நமக்கு சந்தோஷம் இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய சொந்த பந்தங்கள் யாராவது வாழ்வில் சிறியதாக சரிவை எதிர்கொண்டால் போதும். நம்முடைய மனது நம்மை அறியாமலேயே சந்தோஷப்பட்டு விடும். ‘என்னுடைய குடும்பத்திற்கு நீ எவ்வளவு துரோகம் செய்து இருக்கிறாய்’ இன்றைக்கு உனக்கே கஷ்ட நிலைமை வந்துவிட்டதா. ஆண்டவன் வச்சான ஆப்பு. என்று நிச்சயமாக நாம் சொல்லுவோம். நாம் புத்தராகவே இருந்தாலும் நம்முடைய மனது இதை நிச்சயம் நினைக்கும். அதுவே அவன், வாழ்க்கையில் முன்னேறி விட்டாலும் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லோராலும், எல்லோருக்கும் நல்லவர்களாக நடந்து கொள்ள முடியாது. ஆக இந்த இடத்தில் ஒரு மனிதன் உயர் நிலைக்கு வரும்போதும், ஒரு மனிதன் தாழ்ந்த நிலைக்குப் போகும் போதும், எதிராளியின் எண்ணங்களும் கருத்துகளும் ஒவ்வொரு மாதிரி இருக்கத்தான் செய்யும்.

அந்த வரிசையில் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி விட்டீர்கள் என்றால் உங்களுடைய சொந்த பந்தங்கள் நண்பர்கள் என்று எல்லோரும் உங்கள் மீது கண் திருஷ்டி வைப்பார்கள். ஒரு வீடு கட்டி அதில் நீங்கள் குடிபோகிர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த வீடு கட்டிய கதைக்குப் பின்னால் ஏகப்பட்ட கஷ்டம் இருக்கும். ஏகப்பட்ட கடன் இருக்கும். அது சொந்த பந்தங்களுக்கு தெரியாது.

- Advertisement -

வீட்டில் ஒரு கல்யாணம் பண்ணி இருப்பீங்க. அது கூட அடுத்தவனுக்கு பொறுக்காது. இப்படி வீட்டில் வருபவர்களுடைய பெருமூச்சைசு பொறாமை எண்ணங்களில் இருந்து எல்லாம் தப்பிப்பது எப்படி. ஒரு சின்ன தாந்திரீக பரிகாரம் உள்ளது.

உங்களுக்கு வரக்கூடிய கசப்பான கஷ்டங்களை எல்லாம் இந்த கசப்பு எண்ணெய் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். கசப்பு எண்ணெய் என்றால் நம் எல்லோருக்கும் தெரியும். வேப்பெண்ணை தான். பத்து ரூபாய்க்கு வேப்பண்ணை வாங்கி ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது டம்ளரிலோ ஊற்றி, உங்களுடைய வரவேற்பறையில் வைத்து விடுங்கள். யார் கைக்கும் படும்படி வைக்காதீங்க. தட்டிவிட்டால் கீழே கொட்டி விடும்.

- Advertisement -

அலமாரிக்கு மேல் பக்கத்தில் எங்கேயாவது இடம் இருந்தால் அந்த இடத்தில் வைத்து விடுங்கள். அந்த வேப்ப எண்ணெயின் வாசம் உங்கள் வீடு முழுவதும் எப்போதும் நிரம்பி இருக்கும். அதாவது நாற்றம் அடிக்காது. பயப்பட வேண்டாம். அந்த வேப்ப எண்ணெயின் ஆற்றல் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும் அல்லவா. அது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை எல்லாம் அழித்துவிடும். கெட்ட நச்சு, கெட்ட கிருமிகள் இருந்தால் கூட அதை அழிக்கும் சக்தி இந்த வேப்ப எண்ணெக்கு உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் வேப்ப மரத்தை எல்லார் வீட்டு வாசலிலும் வைத்து வளர்த்தார்கள். அந்த காற்றை சுவாசிக்கும் போது நமக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் கிருமியை அந்த காற்று அழித்துவிடும் என்பதற்காக.

இந்த வேப்ப எண்ணெய் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் அழிக்கும். அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி பொறாமையையும் முற்றிலுமாக தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும். மாதம் ஒருமுறை அந்த டம்ளரில் இருக்கும் வேப்பெண்ணெயை எடுத்து மண்ணில் கொட்டி விட்டு, அல்லது வாஷ்பேஷனில் கொட்டி விட்டு மீண்டும் அந்த டம்ளரை கழுவி நல்ல வேப்ப எண்ணெயை ஊற்றி வைத்து விடுங்கள். இது உங்களுடைய வீட்டை கெடுதல் நடக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -