வாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள். பலநாள் கஷ்டங்களுக்கு கூட, ஒரே நாளில் தீர்வு.

kan-dhrishti

கலங்க வைக்கும் கண் திருஷ்டியால், கலங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். தங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் வந்த பிறகு, சிலருக்கு கஷ்டமான சம்பவங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொதுவாகவே இது இயல்புதான். அதிகப்படியான சந்தோஷம் ஒருவருக்கு வருகின்றது என்றால், அதனை தொடர்ந்து துக்கமும் கட்டாயம் வரும். அதிகப்படியான கஷ்டத்தை கடவுள் நமக்கு கொடுக்கின்றான் என்றால், அதனைத் தொடர்ந்து ஏதோ ஒரு நம்மை நமக்கு காத்துக் கொண்டிருக்கிறது என்பது அர்த்தம். ஆகவே வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் வரப்போகின்ற சந்தோசத்தை எதிர்பார்த்து கஷ்டத்தைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எதிர்காலத்தில் எந்த துக்கமும் வரக்கூடாது என்பதற்காக, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருங்கள்.

thrishti

சரி, இப்போது நம்முடைய வாழ்க்கையில் கண் திருஷ்டியின் மூலம் கஷ்டங்கள் வந்தால், அதனை சரி செய்ய சுலபமான முறையில் ஒரு பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே சந்தோஷமாக உள்ளவர்கள் குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த கண் திருஷ்டி தான்.

நமக்கு இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும் பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். நீளமான ஒரு கண்ணாடி டம்ளர். காய்ந்தமிளகாய் உள்ளே இருக்கும் விதைகள் சிறிதளவு, கடுகு 1 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன். 3 காய்ந்த மிளகாயை உடைத்து அதன் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

water

முதலில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து அதனுள்ளே காய்ந்த மிளகாய் விதைகள், இரண்டாவது கடுகு, மூன்றாவதாக உப்பு இந்த வரிசையில் பொருட்களை சேர்த்து, அந்த டைலர் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றிய உடன் இந்த மூன்று பொருட்களும் ஒன்றாக கலந்து விடத்தான் செய்யும் பரவாயில்லை.

- Advertisement -

இந்த டம்ளரை உங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். வீட்டில் கண் திருஷ்டியால் தினம் தினம் சண்டைகள், தினம் தினம் பிரச்சினைகள் என்று இருப்பவர்கள் தினம்தோறும் இப்படி ஒரு டம்ளரை தயார் செய்து வீட்டின் வரவேற்பறையில் வைத்துவிட்டால் போதும்.

dry-chilli-milagai

கண்ணை கலங்க வைக்கும் கண் திருஷ்டியும் நிச்சயமாக ஒரே நாளில் ஒரு நொடிப்பொழுதில் காணாமல் போய்விடும். மறுநாள் அந்த தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விட்டு, மீண்டும் புதியதாக மிளகாய் விதை, கடுகு, கல் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Kadugu

ஒரு 5 நாட்கள் தொடர்ந்து இப்படியாக வைத்து விட்டாலே உங்களுடைய வீட்டில் நிம்மதி நிலவுவதை உங்களால் உணர முடியும். அதன் பின்பு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். ஞாயிற்றுக்கிழமை கூட செய்ய முடியாதவர்கள், மாதம் ஒருமுறை அமாவாசை தினத்தில் மட்டுமாவது இப்படி செய்வது, வீட்டிற்கு மிகவும் நல்ல ஒரு பலனை கொடுக்கும்.

dhristi lemon

உயிரைக் கொல்லும் அளவிற்கு சக்திவாய்ந்தது இந்த கண் திருஷ்டி. இதை யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம். ஏதாவது ஒருவகையில் வீட்டில் இருப்பவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக திருஷ்டி கழிப்பது உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.