இந்த 1 பொருளை உங்க நில வாசல் படியில் இப்படி இருந்தால் போதுமே! கெட்ட எண்ணத்தோடு உங்கள் வீட்டிற்குள் யாருமே நுழைய முடியாது.

nila-vasal1

நம் வீட்டிற்குள் நுழைபவர்கள் எல்லோரதும் எண்ணமும் நல்ல எண்ணமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சிலர் நம் வீட்டிற்குள் நுழையும்போதே கெட்ட எண்ணத்தோடு, பொறாமை குணத்தோடு மனதில் தீயதை விதைத்து, வயிற்றெரிச்சல் உடன் உள்ளே நுழைவார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். நம் வீட்டில் இருக்கும் நன்மை கூட, கெடுதலாக மாறிவிடும். யாரையும் குறை கூறுவதற்காக இந்த பதிவு அல்ல. ஆனால் நம்மில் சில பேர் இதை அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்போம். யாராவது ஒருவர், நம்முடைய சொந்தக்காரராகவே இருந்தாலும், அவர்களுக்கு நாம் நன்றாக வாழ்வது பிடிக்காமல் இருக்கும். அந்த வயிற்றெரிச்சல் உடன் நம் வீட்டிற்குள், அவர்கள் வந்து சென்ற உடனேயே நம்முடைய வீட்டின் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

nila-vasal

திடீர் என்று நம் வீட்டில் உள்ளவர்கள் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விடும். திடீரென்று பண நஷ்டம் ஏற்படும். திடீரென்று பெரிய சண்டை பூதாகரமாக வெடிக்கும். இப்படி பல கஷ்டங்களை நாம் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். ‘இவங்க வந்துட்டு போன பின்பு தான் நம் வீட்டில் எவ்வளவு பிரச்சனை என்று நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தோன்றும்.’

இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நம் வீட்டிற்குள் நுழைபவர்கள் கெட்ட எண்ணத்தை, கெட்ட அதிர்வுகளை அவர்களுடைய பாதங்களிலிருந்து அகற்றுவதற்கு நாம் என்ன பரிகாரத்தை சுலபமான வழியில் செய்யலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

padikaram1

பொதுவாகவே படிகாரத்திற்கு எதிர்மறை ஆற்றலை, கண்திருஷ்டியை தடுத்து நிறுத்தும் சக்தி இயற்கையாகவே உள்ளது. இந்த பரிகாரத்தை வெளியில் கருப்பு கயிறு கட்டி ஆணியில், மேல் பக்கத்தில்தான் தொங்க விடுவோம் அல்லவா? கொஞ்சம் மாறுதலாக,  படிகாரத்தை எடுத்து, சிறிய துண்டுகளாக நசுக்கி ஒரு பேப்பரில் வைத்து மடித்து அல்லது ஒரு துணியில் வைத்து சதுரமாக மடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நில வாசப்படிக்கு வெளியில் கட்டாயம் இப்போது எல்லோரது வீட்டிலும் மிதியடி இருக்கத்தான் செய்கிறது. உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்கள் அந்த மிதியடியின் மேல் காலை வைத்து விட்டு தான் நுழைய வேண்டும். அந்த மிதியடிக்கு அடியில் சதுரமாக மடித்து வைத்திருக்கும் இந்த பரிகாரத்தை அப்படியே வைத்து விடுங்கள். மிதியடிக்கு இந்தப் பொருள் இருப்பது வேறு யாருக்கும் தெரியக்கூடாது.

mat

உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்கள் காலை அந்த மிதியடியின் மேல் வைக்கும் போது, அவர்களுடைய கெட்ட எண்ணத்தை, கெட்ட அதிர்வலைகளை அந்த படிகாரம் நிச்சயம் இழுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் பின்பு அவர்கள் உங்கள் வீட்டுக்கு உள்ளே கெட்ட எண்ணத்தோடு நுழைந்தாலும், அவர்களது வயிற்றெரிச்சலால், நம் வீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

padikaram

மிதியடிக்கு அடியில் படிகாரம் சிறிய துண்டு வைத்தால் கூட போதும். வருபவர்களுடைய காலில் தட்டுப்படும் படி, வைத்து விடக்கூடாது. படிகாரம் மிதியடிக்கு அடியில் இருப்பதை, உங்கள் வீட்டில் இருப்பவர்களை தவிர வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. படிகாரம் கரைந்த பின்பு மாற்றினாலே போதும்.

fear-pei-kanavu

படிகாரத்தை காலில் மிதிபடும் இடத்தில் வைக்கலாமா? என்ற கேள்வி நிச்சயம் பல பேருக்கு எழுந்திருக்கும். படிகாரத்தை பொடி செய்து, சுடு தண்ணீரில் போட்டு, காலில் வெடிப்பு இருந்தால் காலை அந்த தண்ணீரில் வைப்பார்கள். ஆகையால் படிகாரத்தை மிதியடிக்கு அடியில் வைப்பதன் மூலம் வீட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. நிச்சயமாக இந்தப் பரிகாரம் உங்கள் வீட்டிற்கே பாதுகாப்பு அரணாக அமையும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.