இந்த தெய்வங்கள் கனவில் வந்தால் இப்படியும் பலன்கள் கிடைக்குமா? நீங்கள் கனவில் காணும் தெய்வங்களும், அதற்குரிய பலன்களும்!

god-in-dream

ஆழ்ந்த தூக்கத்தின் பொழுது நம்மை அறியாமல் நம் நினைவில் வந்து போகும் சில விஷயங்களை தான் ‘கனவு’ என்கிறோம். இந்த கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லை. ஒரு சிலருக்கு எப்பொழுதாவது மட்டும் சில கனவுகள் உண்மையில் நடந்திருக்கும் அல்லது நடக்க இருக்கும். இப்படி கனவுகள் ஒவ்வொருவருக்கும் பலவிதமான கேள்விகளை மனதிற்குள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நம் கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sleep1

நாம் தூங்கும் பொழுது எப்பொழுதும் இறைவனுக்கு ஒரு பிரார்த்தனை செய்து விட்டு தூங்குவது நல்லது என்கிறது சாஸ்திரம். கெட்ட கனவுகள் வராமல் இருக்கவும், நல்ல எண்ணங்கள் அதிகரிக்கவும் இரவு தூங்கும் பொழுது எப்பொழுதும் இறை நாமத்தை உச்சரித்து, இறை சிந்தனையுடன் தூங்கச் செல்வது நலம் தரும். அப்படி தூங்க செல்லும் பொழுது சில பேருடைய கனவுகளில் சில கடவுள்கள் தோன்றுவதும் இயல்பானது தான். அப்படி உங்கள் கனவில் மகாலட்சுமி ஆனவள் காட்சி தந்தால் விரைவில் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வர இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். எதிர்பாராத வகையில் திடீரென பணம் வரவு எங்கிருந்தாவது வர வாய்ப்புகள் உண்டு.

உங்கள் கனவில் முருக அவதாரங்கள் அல்லது அவருடைய வேல் சின்னம், மயில் சின்னம் போன்றவை வந்தால் மனதில் நீங்கள் நீண்ட காலம் நடக்கவில்லையே என்று நினைத்திருக்கும் சில விஷயங்கள் நிச்சயமாக வெற்றி அடைய செய்ய இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. முருக வேலை கனவில் கண்டால் தொல்லை கொடுத்து வந்த பகைவர்களின் தொல்லை ஒழிய கூடும்.

உக்ர தெய்வங்களான அய்யனார், கருப்பசாமி, காவல் தெய்வம், காளி போன்ற தெய்வங்கள் கனவில் வந்தால் ஏதோ ஒரு விஷயம் உங்களை அல்லது உங்கள் சொத்துக்களை அபகரிக்க செய்யும் வகையில் நடக்க இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. பகைவர்கள் முதுகுக்குப் பின்னால் குத்தப் போகிறார்கள் என்பது அர்த்தம் எனவே முன்னெச்சரிக்கையுடன் மனோ தைரியத்தை வளர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

உங்கள் கனவில் பிள்ளையார், யானை போன்ற உருவங்கள் வந்தால் நீங்கள் மனதில் நினைக்கும் புதிய விஷயங்களை யோசிக்காமல் மேற்கொள்வது நல்லது என்று சொல்லாமல் சொல்வதாக அர்த்தமாகிறது. எவ்வளவு குழப்பங்கள் மனதில் இருந்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கும் என்பதை உணர்த்தும் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். வரக்கூடிய சங்கடங்கள் வந்த வழியே திரும்பிப் பார்க்காமல் சென்று விடுமாம்.

manjal-pillaiyar1

பெருமாள் அவதாரங்கள் கனவில் தோன்றினால் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்குமாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் பெருமாளை வணங்கிவிட்டு துவங்க ஏற்றம் காணலாம். பழைய தொழிலில் இருப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும்.

Perumal

அம்பாள், மாரியம்மன், மீனாட்சி அம்மன் போன்ற அன்னை தெய்வங்களை கனவில் வரும் பொழுது உங்களுக்கு என ஒருவர் உங்களை பாதுகாக்க வரக்கூடும். அன்புக்கு ஏங்கிய உங்களுக்கு அதனை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஒரு உறவு கிடைக்கும் என்பதைக் குறிக்கும். சிவ ஸ்வரூபத்தை அல்லது லிங்கத்தை கனவில் கண்டால் இறை பக்தி மேலும் அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது. இறை பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புகள் அமையும். புண்ணிய காரியங்களை நிறைய செய்வீர்கள். கனவில் எந்த தெய்வம் வந்தாலும் நல்ல பலன்கள் மட்டுமே கிடைக்கும். எனவே தூங்கும் பொழுது எப்பொழுதுமே இறைவனை தியானித்து விட்டு தூங்கச் செல்லுங்கள் நன்மைகள் நடக்கும்.