- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

- Advertisement -

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு, நாம் எல்லோருமே நம்முடைய வீட்டில், குளித்து முடித்துவிட்டு முருக பெருமானது வழிபாட்டை மேற்கொள்வோம். கடந்த 5 நாட்களாக விரதம் இருந்தவர்கள், இல்லாதவர்கள், எல்லா முருக பக்தர்களுமே, இன்று முருகனை கட்டாயம் வழிபாடு செய்வார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. முருகர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அருணகிரிநாதர் தான்.

முருகனுக்கு பிடித்தமான எத்தனையோ தமிழ் பாடல்கள் இருந்தாலும், இன்றைய தினம் பூஜை அறையில் கட்டாயம் உச்சரிக்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. நமக்கு கஷ்டம் என்று வந்தால் நாம் தான் முதலில் போய் நிற்க வேண்டும் அல்லவா. ஆனால் இன்றைய தினம் முருகனை நினைத்து இந்த பாடலை பாடி வேண்டிக் கொண்டால், உங்களுடைய கஷ்டத்தை தீர்த்து வைக்க அந்த முருகப்பெருமான் உங்கள் முன்னால் ஓடோடி வந்து விடுவார்.

- Advertisement -

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் என்னென்ன என்பதை அவரே முதலில் நின்று பார்த்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை எல்லாம் தன் கையில் இருக்கும் வேல் கொண்டு அழித்துவிடுவார். நிச்சயம் இது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகரை மனதார நினைத்து, கையில் கொஞ்சம் சிவப்பு புஷ்பங்களை வைத்துக் கொள்ளுங்கள். அரளிப்பூ, பன்னீர் ரோஜா, எதுவாக இருந்தாலும் சரி பின் சொல்லக் கூடிய இந்த பாடலை படித்துக் கொண்டே முருகன் மீது பூவை தூவுங்கள்.

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

நாளென் செயும் வினை தானென் செயு மெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

- Advertisement -

எளிமையாக படிக்க எளிய தமிழ் பாடல்

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

இந்தப் பாடலை இன்று பூஜை அறையில் அமர்ந்து முருகனைப் பார்த்து 6 முறை பாடுங்கள். நிச்சயம் அந்த முருகப்பெருமான் உங்கள் வினைகளை தீர்த்து வைக்க ஓடோடி வந்து விடுவார். ஒவ்வொரு நாளும், நீங்கள் செய்த வினையால் கஷ்டம் வராது. நவகிரகத்தால் வரும் கஷ்டங்கள் உங்களை நெருங்காது, அப்படியே பிரச்சினை வந்தாலும், முருகப்பெருமான் தன் அழகான தோற்றத்தோடு உங்கள் முன் வந்து நிற்பான் கவலையே படாதீங்க.

இதையும் படிக்கலாமே: சூரசம்ஹாரம் முடிந்தவுடன் குளிக்கும் முறை

இந்த பாடலை மற்ற நாட்களில் படித்து பலன் பெறுவதற்கும், இந்த நாளில் படித்து பலன் பெறுவதற்கும், நிறைவே வித்தியாசங்கள் இருக்கிறது முருக பக்தர்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே இந்த பதிவு உங்களோடு இன்று பகிரப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை படித்து பலன் பெறலாம்.

சற்று முன்