வைகாசி விசாக ஸ்பெஷல் கந்தரப்பம் செய்முறை

kandharpam
- Advertisement -

நாளை வைகாசி விசாகம் அன்றைய தினம் முருகப்பெருமானை அனைவரும் வழிபடுவோம். அவ்வாறு வழிப்படும் பொழுது முருகப்பெருமானுக்கு பிடித்தமான பொருட்கள், பழங்கள், பூக்கள் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வோம். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைப்பதற்கு என்று சில பொருட்கள் இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக வைகாசி விசாகத்திற்கு என்று ஸ்பெஷல் ஆக திகழக்கூடியதுதான் கந்தர்ப்பம்.

இந்த கந்தர்ப்பத்தை நெய்வேத்தியமாக வைத்து படைத்து வழிபாடு செய்வதன் மூலம் முருகப் பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெறுவதோடு நாம் வேண்டிய வார்த்தையும் நம்மால் பெற முடியும். இந்த பலகாரத்தின் பெயரிலேயே முருகப்பெருமானின் பெயரும் சேர்ந்து வருவதால் இந்த பலகாரம் முருகப்பெருமானுக்கு உகந்த பலகாரமாக திகழ்கிறது. இப்பொழுது கந்தர்ப்பத்தை எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – ஒரு கப்
  • உளுந்து – ஒரு கப்
  • கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1/4 கப்
  • ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
  • வெல்லம் – ஒரு கப்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசியை ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு அளக்கும் பொழுது கோபுரமாக அளக்காமல் சரிசமமாக அளந்து கொள்ளுங்கள். உளுந்தை கோபுரமாக அளந்து கொள்ளுங்கள். இதனுடன் கடலைப்பருப்பு, வெந்தயம் இவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

பிறகு 3 மணி நேரம் இதை ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் இல்லாமல் இவை அனைத்தையும் வடித்துக் கொள்ளுங்கள். பிறகு மிக்ஸி ஜார்வி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். பிறகு இதனுடன் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், வெல்லம் இவற்றை சேர்த்து மறுபடியும் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் முக்கால் பதத்திற்கு காய்ந்ததும் ஒரு குழி கரண்டியை பயன்படுத்தி மாவை எடுத்து அப்படியே எண்ணெயில் ஊற்ற வேண்டும்.

அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும். இந்த மாவின் மீது எண்ணெயை எடுத்து ஊற்றி ஒரு புறம் சிவந்த பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். பூரி சுடுவது போல் சுட வேண்டும். மிகவும் சுவையான கந்தர்ப்பம் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: வெண்டைக்காய் சாதம் செய்முறை

முருகப்பெருமானுக்கு பிடித்தமான இந்த கந்தர்ப்பத்தை நாளைய தினம் செய்து வைத்து வழிபாடு செய்து முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -