உங்கள் பேராசை எனும் குணத்தை வெல்ல வேண்டுமா? இந்த பாடலைப் படித்தால் கர்வம் அழிந்து மனம் உங்கள் பேச்சை கேட்கும்!

murugan-om
- Advertisement -

மனிதன் பிறக்கும் போது எதையும் கையில் கொண்டு வருவது இல்லை. போகும் பொழுதும் எதையும் கையில் கொண்டு போவது இல்லை ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவன் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆசை என்னும் இந்த ஒன்றை நீங்கள் அழித்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் தோல்வி என்பதே ஏற்படாது! மனதில் கவலையும் இருக்காது. ஆனால் மனதில் இருக்கும் பேராசையை எப்படி வெல்வது? கந்தர் அந்தாதியின் இந்த பாடலை ஒருமுறை படித்தாலே கர்வம் அழிந்து விடுமாம்! அதைப்பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கந்தர் அந்தாதி பாடல் எண் 46:
செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு துன்பம் நேர்வது ஆசையால் தான். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிறார் புத்தர். ஆசையைத் துறந்தால் அகிலத்தையும் வெல்லலாம் என்று தெரிந்திருந்தும் நம்மால் நம்முடைய ஆசைகளை கட்டுபடுத்த முடியாமல் போகிறது. ஒன்றின் மீது பற்று வைத்து அதை அடைய வேண்டும் என்று நினைத்தால் அதை எப்படியாவது அடைந்து விடுகிறோம். ஆனால் அத்துடன் நாம் நிறுத்திக் கொள்வது இல்லை, மீண்டும் வேறு ஒன்றின் மீது ஆசை வைக்கிறோம்.

இப்படி போதும் என்று சொல்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டே போவதால் ஒரு கட்டத்தில் நம்மால் நிம்மதியே இல்லாமல் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். எனக்கு ஆசையே இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் மேற்கூறிய இந்த பாடலை தினமும் 21 முறை உச்சரிக்க உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் அழியும். முற்றிலுமாக ஒரே அடியாக அழியாவிட்டாலும், மெல்லமெல்ல உங்களுடைய ஆசைகள் அழிய ஆரம்பிக்கும்.

- Advertisement -

முருகப் பெருமானிடம் இந்த பிரபஞ்சத்தில் எது முடிவான பொருள்? என்று கேட்பதைப் போல அமையப் பெற்றிருக்கும். இந்த பாடல் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. முடிவே இல்லாத இந்த உலகில் இது கிடைத்தால் நமக்கு எல்லாம் கிடைத்த மாதிரி என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஆணித்தரமாக நமக்கு எடுத்துரைக்கும் அற்புதமான பாடல்.

இந்தப் பாடலின் விளக்க உரை:
போர் புரியும் திறனும், மத்தகமும், கோபமும் கொண்ட ஐராவதம் என்கிற யானையால் வளர்க்கப்பட்ட மற்றும் தேவசேனையின் மணம் வீச இறுமாப்பும், பூந்தாதுகளும் கொண்டு தன பாரத்தில் மூழ்கும் கடப்ப மாலை தரித்த முருகப்பெருமானே இவ்வுலகத்தில் வினைகளால் ஏற்படும் பிற சமய நூல்களின் கர்வத்தையும் வெல்லுகின்ற வேதாகம நூல்களை படைத்தவனே, தாமரை மலர்களில் இருந்து தோன்றிய பிரம்மாக்கள் அழிந்து, தேவர்களின் சாரம்விடும் நேரத்திலும், நித்யத்வம் அடைய இப்பிரபஞ்சத்தில் முடிவான பொருள் எது? என்பதை உபதேசிக்க வேண்டும் என்பது போல விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலையிலும் ஆசையைத் துறந்து, கர்வம் ஒழிந்த தன்னிலை அறிய உதவக் கூடிய வகையில், இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. முருகனை நோக்கி தவமிருந்து கேட்கக்கூடிய இந்த கேள்வியின் விளைவாகவே நமக்கு ஆசைகள் ஒழிந்து போகிறது.

- Advertisement -